ராஜபாளையம் நகர திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
ராஜபாளையம், செப்.16: ராஜபாளையம் தொகுதியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செட்டியார்பட்டியிலுள்ள ஒன்றிய கழக அலுவலகத்தில் அண்ணா படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதி மொழி ஏற்றார். இந்நிகழ்ச்சியில் செட்டியார்பட்டி பேரூர் செயலாளர் இளங்கோவன் மற்றும் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், கவுன்சிலர்கள்...
மாணவர்கள் ஆபத்தான பயணம்
ராஜபாளையம், செப்.16: ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பேருந்துகளில் ஆபத்தான பயணத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து நகரில் செயல்படும் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள்...
சிவகாசி அருகே மகனை வெட்டிய தந்தை கைது
சிவகாசி, செப். 16: சிவகாசி அருகே மகனை அரிவாளால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே நாரணாபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் கருத்தப்பாண்டி(42). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி குடும்பத்தகராறு காரணமாக மகன் சுதாகருடன்(22) பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் சிவகாசி திரும்பிய கருத்தப்பாண்டி, தனது குடும்ப...
ரூ.1 லட்சம் பட்டாசு பறிமுதல்
சிவகாசி, செப். 15: சிவகாசியில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகாசி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் நாரணாபுரம் ரோட்டில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் பின்புறம் சட்டவிரோதமாக பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவற்றை...
செப்.19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விருதுநகர், செப்.15: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் செப்.19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் செப்.19 காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
பைக் விபத்தில் கண்டக்டர் பலி
சிவகாசி, செப். 15: சிவகாசி அருகே டூவீலரில் இருந்து கீழே விழுந்து அரசு பஸ் கண்டக்டர் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சங்கிலிராஜ்(28). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தனது உறவினரான ஜெயலட்சுமி(57) என்பவருடன் டூவீலரில் எரிச்சநத்தம்- அழகாபுரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் நிலைதடுமாறி...
ரேஷன் கார்டு: சிறப்பு முகாம்
சிவகாசி, செப்.14: விருதுநகர் மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் ரேசன் அட்டையில் முகவரியை மாற்றம் செய்யவும், புதிய பெயர்களை சேர்க்கவும், திருமணமானவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்யவும், செல்போன் எண்ணை மாற்றம் செய்ய வசதியாக நேற்று காலை, வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை...
தமிழக அரசின் திட்டங்கள் மக்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளன: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
திருச்சுழி, செப்.14: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும்...
சிவகாசி நகர் பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அவதி
சிவகாசி, செப்.14: சிவகாசி நகர் பகுதிகளில் சாலையில் மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். சிவகாசி நகர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் கூட்டம், கூட்டமாக...