ஸ்டாப்பில் சரக்கு அடித்தவர்கள் கைது
சிவகாசி, டிச. 10: சிவகாசி நகர் கிழக்கு எஸ்ஐ ரபியம்மாள் மற்றும் போலீசார் சிவகாசி- சாத்தூர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீனம்பட்டி பஸ் ஸ்டாபில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமச்சந்திரன் (25), பட்டாசு ஆலை தொழிலாளி வல்லரசு (24) ஆகியோர் பொதுமக்களுக்கு இடையூராக மது அருந்தி கொண்டிருந்தனர். இதையடுத்து...
ராஜபாளையத்தில் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ராஜபாளையம் டிச.9: ராஜபாளையம் அருகே அடிப்படை வசதி கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மேல ராஜகுலராமன் ஊராட்சி பகுதியில் உள்ள என்.கிருஷ்ணாபுரம் பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி,...
விருதுநகரில் மக்கள் குறைதீர் கூட்டம்
விருதுநகர், டிச.9: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சுகபுத்ரா, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும்பட்டா மாறுதல், வேலை வாய்ப்பு, ரேசன்...
தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்க இடங்கள் தேர்வு
விருதுநகர், டிச.9: விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான இடங்கள் நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் தூய்மை பணியில் 300 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தூய்மை...
விருதுநகரில் ரத்ததானம்
விருதுநகர், டிச. 8: விருதுநகர் ஆத்துப்பாலம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நெல்லை மண்டல செயலாளர் டாக்டர் பிரேம்நாத் முகாமை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக நம்மவர் தொழிற் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சொக்கர், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் பன்னீர்...
வாழையை வாடலில் இருந்து காக்க ஆலோசனை
ஸ்ரீவில்லிபுத்தூர், டிச. 8: வாழை பயிரில் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டால் பயிரை வேர் பகுதி தவிர அனைத்தையும் அழித்து விட வேண்டும். அவ்விடத்தில் 2 கி.கி சுண்ணாம்பு தூள் போட வேண்டும். வேர் பகுதியில் துளையிட்டு 60 மிகி கார்பன்டசிம் மருந்து நிரப்பப்பட்ட காப்சூல் குப்பியை உள்ளே செலுத்த வேண்டும். அல்லது 20...
சாத்தூரில் கண்மாய்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
சாத்தூர், டிச. 8: சாத்தூர் பகுதியில் அதிகளவில் பாசன கண்மாய்கள், ஊரணிகள் உள்ளன. இதில் 100 ஏக்கருக்கும் மேல் பாசன வசதி கொண்ட கண்மாய்கள் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலும், அதற்கு கீழ் பாசனம் உள்ள சிறு கண்மாய்கள் மற்றும் ஊரணிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பராமரிப்பிலும் இருந்து வருகின்றன. சிறு பாசன கண்மாய்கள், பொதுப்பணி...
ஆர்ப்பாட்டம்
விருதுநகர், டிச. 7: விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே தமுமுக மேற்கு மாவட்ட தலைவர் பஷீர் அஹமது தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜனநாயக படுகொலைக்கு வழிவகுக்கும் அவசரமான சிறப்பு வாக்காளர் பட்டியல் சீராய்வு பணியை கைவிட வேண்டும். வக்பு திருத்த சட்டம் 2025 என்ற வழிப்பறி கொள்ளை திட்டத்தை திரும்ப...
அனுமதியின்றி பட்டாசு பதுக்கியவர் கைது
சிவகாசி, டிச. 7: சிவகாசி நகர் கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேராபட்டி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடை அருகே தகர செட்டில் அனுமதியின்றி 9 அட்டை பெட்டிகளில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த மீனம்பட்டி ரத்தினபுரிநகரை சேர்ந்த...