வெளிநாட்டில் இறப்பவர்களுக்கு நலவாரியம் ரூ.1 லட்சம் நிதியுதவி
விருதுநகர், ஆக.6: வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற அயலகத்தமிழர் நல வாரிய உறுப்பினர் திடீரென்று மரணம் எய்தும் நிலையில், வறிய நிலையில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவியாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. குடும்பத்தின் முதன்மை பொருளீட்டும் நபரை இழந்து, துன்புறும் அயலகத் தமிழர்களின் குடும்பத்தினருக்கு, நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்....
ஆக.12ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விருதுநகர், ஆக.6: விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் கோட்டங்களில் ஆக.12 காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். ...
மனைவி தலையில் கத்தியால் குத்திய கணவன் கைது
விருதுநகர், ஆக.6விருதுநகர் பாரதி நகரை சேர்ந்தவர் கார்த்திக்(38). இவரது மனைவி அபிராமி(32). 14 வயதில் மகன் இருக்கிறார். கார்த்திக்கிற்கு வெளிநபர்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் சென்னை சென்று நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். வந்தவர் மனைவியிடம் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்....
வில்லிபுத்தூரில் சிபிஎம் கட்சியினர் போராட்டம்
வில்லிபுத்தூர், ஆக.5: வில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வில்லிபுத்தூர் ஒன்றியம் பூவாணி ஊராட்சிக்குட்பட்ட அருந்ததியர் காலனி பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சின்னத்தம்பி தலைமையில் பொதுமக்கள் காத்திருப்பு...
ஆலோசனை கூட்டம்
சாத்தூர், ஆக.5: சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா ஆக.15ல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோட்டாச்சியர் கனகராஜ் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாகத்தினர், இருக்கன்குடி ஊராட்சி தனி அலுவலர், வருவாய் துறையினர், காவல் துறையினர், இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி பகுதி...
வில்லி. கலசலிங்கம் பல்கலையில் புத்தாக்க பயிற்சி துவக்க விழா
வில்லிபுத்தூர், ஆக.5: வில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2025-26 முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. இதில் வேந்தர் முனைவர் தரன் தலைமை தாங்கினார். இணை வேந்தர் டாக்டர் அறிவழகி தரன், துணைத்தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். துணை வேந்தர் நாராயணன் வரவேற்றார். பதிவாளர் வாசுதேவன்,...
விதிமீறி விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல்
சிவகாசி, ஆக.4: சிவகாசி அருகே சாணார்பட்டி பகுதியில் எம்.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் முதியவர் ஒருவர் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து அவரிடம் இருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் முதியவர் சுக்கிரவார்பட்டியை சேர்ந்த ராஜாங்கம் (56) என்பவரை கைது...
மீன்பாசி குத்தகைக்கு ஒப்பந்தங்கள் வரவேற்பு
விருதுநகர், ஆக.4: விருதுநகர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் வத்ராப் பகுதியில் தாமரைக்குளம், ராஜபாளையம் பகுதியில் மருங்கூர், குறவன்குளம் ஆகிய 3 கண்மாய்களில் மீன்பாசி குத்தகை உரிமை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்த புள்ளிகளில் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும்...
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பழப்பயிர்கள் நடவு செய்ய முடிவு
விருதுநகர், ஆக.4: கலெக்டர் அலுவலக வளாகத்தில் பயன்தரும் 14 வகையான வறண்ட நில பழப்பயிர்களை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை, அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் இணைந்து மாவட்டத்தில் வறட்சியை தாங்கும் வறண்ட நில பழப்பயிர்களை நடவு செய்வதற்கான முன்னெடுப்பு நிகழ்வை கலெக்டர் சுகபுத்ரா தொடங்கி வைத்தார். கலெக்டர் கூறுகையில்,...