தீயணைப்பு நிலையத்தில் இன்று தீ தடுப்பு நிகழ்ச்சி

      ராஜபாளையம், அக்.11: ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்தில் இன்று தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்தில் ‘வாருங்கள் கற்றுக் கொள்ளலாம்’ என்ற தீ தடுப்பு பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்க நிகழ்ச்சி இன்றும் நாளையும் நடைபெற உள்ளது....

பள்ளி மாணவர்கள் திடீர் மாயம்

By Francis
11 Oct 2025

    சிவகாசி, அக்.11: சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் வீரதினேஷ் (16). இவர் 11ம் வகுப்பு படித்து வந்தார். செந்தில்குமார் உறவினர் மகனான அருண்பிரசாத் (15) என்பவர் 9ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் ஒன்றாக இருந்த வீரதினேஷ், அருண்பிரசாத் இருவரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல...

பைக் கவிழ்ந்து விபத்து

By Francis
11 Oct 2025

  சிவகாசி, அக்.11: பைக் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் மகாலிங்கம்(49). இவர் தனது உறவினரான பாண்டி(50) என்பவருடன் அருப்புக்கோட்டையில் இருந்து திருத்தங்கல்லுக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்தங்கல்லில் உள்ள ஒரு பட்டாசு கடையின் அருகில் வரும் போது வாகனம் நிலைதடுமாறி...

சக்தி காளியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம்

By Francis
09 Oct 2025

  காரியாபட்டி, அக்.10: சக்தி காளியம்மன் கோயில் புரட்டாி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். காரியாபட்டி பேரூராட்சி காமராஜர் காலனியில் அமைந்துள்ள சக்தி காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக...

8ம் வகுப்பு படித்தவர்கள் மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சியில் பங்கேற்கலாம்

By Francis
09 Oct 2025

  அருப்புக்கோட்டை, அக்.10: அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த 26 நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியானது தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில், வெற்றி நிச்சயம் என்ற பிரிவில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. நேற்று தொடங்கிய பயிற்சி முகாம் நவம்பர் 8ம் தேதி வரை நடைபெற...

காளீஸ்வரி கல்லூரி மாணவி அகில இந்திய போட்டிக்கு தகுதி

By Francis
09 Oct 2025

  சிவகாசி, அக்.10: சிவகாசி  காளீஸ்வரி கல்லூரி மாணவி அகில இந்திய குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சிவகாசி  காளீஸ்வரி கல்லூரியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் உயிரிதொழில்நுட்பவியல் துறையின் முதலாமாண்டு மாணவி தேஜா  முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று அகில இந்திய குத்துச்...

வேன்-ஆட்டோ மோதல் பலி 2 ஆக உயர்வு

By Karthik Yash
08 Oct 2025

ராஜபாளையம் அக்.9: ராஜபாளையத்தில் வேன்- ஆட்டோ மோதிய விபத்தில் பலி 2 ஆக அதிகரித்துள்ளது. ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் அரிசி பாரம் ஏற்றிச் சென்ற வேன், ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுநர் ஐயப்பன் நிகழ்விடத்தில் உயிரிழந்தார். ஆட்டோவில் வந்த மாணவன் மகாவீர்...

வில்லிபுத்தூர் அருகே கத்தியை காட்டி ரூ.2 லட்சம் மதிப்பு நகை, பணம் பறிப்பு 4 பேர் மீது வழக்கு

By Karthik Yash
08 Oct 2025

வில்லிபுத்தூர், அக்.9: சிவகாசி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி(41). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கனகராஜ், ரஞ்சித், சரவணன், ராஜா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி 7 கிராம் செயின், 3 கிராம் மோதிரம் என சுமார் ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அவரது வீட்டில் இருந்த...

பட்டாசு ஆலை தீ விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

By Karthik Yash
08 Oct 2025

ஏழாயிரம்பண்ணை, அக்.9: வெம்பக்கோட்டை அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி மகன் பாண்டியராஜ்(27). இவர் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள இ.ரெட்டிபட்டியில் இருந்து சிங்கம்பட்டி செல்லும் சாலையில் உள்ள பட்டாசு அலையில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 13ம் தேதி வழக்கம்போல் பட்டாசு ஆலைக்கு பணிக்கு சென்றார். அன்று மதியம் பட்டாசு...

அக்.14ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

By Ranjith
07 Oct 2025

விருதுநகர், அக். 8: சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் அக்.14ம் தேதி செவ்வாய் கிழமை காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் கலந்து கொண்டு விவவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என வேளாண் துறை...