சாத்தூரில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சாத்தூர், ஜூலை 31: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாத்தூர் நகர் காவல் நிலைய எல்லைப்பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. சாத்தூர் ரயில் நிலையத்தில்...
கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதியர்கள் சங்கம் போராட்டம்
விருதுநகர், ஜூலை 30: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புவனேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். வருவாய் கிராம...
சாலை பணியாளர் ஆர்ப்பாட்டம்
விருதுநகர், ஜூலை 30: விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் குமார்பாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், சாலைப்பணயாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். மேல்முறையீடு செய்யாமல் உயர்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும். சாலைப்பணியாளர்களின் உயர்நீத்தவர்களின் குடும்பத்தில் கருணை நியமனம்...
அருப்புக்கோட்டையில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை
அருப்புக்கோட்டை, ஜூலை 30: அருப்புக்கோட்டையில் கடன் தொல்லையில் பெண் தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் தட்சிணாமூர்த்தி கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி(49). இவரது மனைவி சீதாலட்சுமி(44). ரவி ஆர்டிஸ்ட் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ரவி மனைவி சீதாலட்சுமி ஏல சீட்டு நடத்துபவர்களுக்கு...
மழைநீர் செல்ல வாறுகால் அமைக்கும் பணி விறுவிறுப்பு
சாத்தூர், ஜூலை 29: சாத்தூர் நன்குவழிச்சாலையில் மழைநீர் செல்ல வாறுகால் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதுரை-கன்னியாகுமாரி நான்குவழிச் சாலையில் படந்தால் விலக்கு பகுதி உள்ளது. இங்கு நான்கு வழிச்சாலை குறுக்காக பெரியார் நகர், ஆண்டாள்புரம், அண்ணாநகர், படந்தால், தாயில்பட்டி ஆகிய பகுதிக்கு செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி பலியாகியும்,...
நோய் இல்லையென உறுதி செய்ய புதிதாக வாங்கும் ஆடுகளை குறைந்தது; 2 வாரம் தனியாக வைக்க வேண்டும்: கால்நடை பராமரிப்புத்துறை அட்வைஸ்
விருதுநகர், ஜூலை 29: புதிதாக வாங்கிய ஆடுகளை குறைந்தது இரண்டு வாரங்கள் தனியாக வைத்து நோய் ஏதும் இல்லையென உறுதி செய்த பின்னரே மந்தையில் சேர்க்க வேண்டும் என, கால்நடை பராமரிப்புத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. ஆட்டுக்கொல்லி நோய் ஆடு வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் கொடிய நோயாகும். இந்நோய் மொரிபீ வைரஸ் எனும்...
பொங்கல் திருவிழாவில் இரட்டைமாட்டு வண்டி பந்தயம்
கமுதி, ஜூலை 29: கமுதி அருகே பொந்தம் புளி வாழவந்தம்மன் கோயில் ஆடி பொங்கல் விழாவில், இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. கமுதி அருகே பொந்தம்புளி கிராமத்தில் வாழவந்தம்மன் கோயில் ஆடி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் கோயில் முன்பு ஏராளமான பொதுமக்கள்...
இனாம்ரெட்டியபட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
விருதுநகர், ஜூலை 28: விருதுநகர் ஒன்றியம் இனாம்ரெட்டியபட்டி ஊராட்சியில், சமூக தணிக்கை கூட்டத்தில், 2024-25 நிதியாண்டில் நூறு நாள் வேலை திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளுக்கான சமூகத்தணிக்கை ஜூலை 21 முதல் ஜூலை 25 வரை வட்டார வள பயிற்றுநர் ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்ட தலைவர் கிருஷ்ணவேணி...
முன்மாதிரியான சேவை விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
விருதுநகர், ஜூலை 28: குழந்தைகள் நலன் சேவை நிறுவனங்கள், முன்மாதிரி சேவை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்டு வரும் நிறுவனங்களை அங்கீகரித்து ஊக்குவிக்க ஆண்டுதோறும் முன்மாதிரி சேவை விருதுகள் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள்...