அக்.5, 6ம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீடுதேடி வழங்கப்படும்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்.5 மற்றும் 6ம் தேதி வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்.5 மற்றும் 6ம் தேதி 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறானளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட...
கிராம சபைக் கூட்டம் அக்.11க்கு மாற்றம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் அக்.2 காந்தி ஜெயந்தியன்று நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டம் நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. ஒத்திவைக்கப்பட்ட கிராம சபைக்கூட்டம் அக்.11 அன்று நடைபெறும். கூட்டத்தில், கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறுதல்,...
நாளை டாஸ்மாக் விடுமுறை
விருதுநகர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: காந்தி ஜெயந்தி தினமான நாளை (அக்.2) டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் எப்.எல் 1, 2, 3 மற்றும் 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்படும்...
நாளை மறுநாள் நடக்கிறது: சதுரகிரியில் அம்பு விடும் நிகழ்வு
வத்திராயிருப்பு, செப்.30: சதுரகிரியில் நாளை மறுநாள் அம்பு விடும் நிகழ்வு நடைபெற உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான நவராத்திரி திருவிழா கடந்த 23ம் தேதி காப்பு...
காய்கறி, பழம் பயிர்களை தாக்கும் மாவுப்பூச்சிகள்
சிவகாசி, செப்.30: மாவுப்பூச்சி தாக்குதலின் கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையினர் விளக்கமளித்துள்ளனர். காய்கறி மற்றும் பழப்பயிர்கள் உற்பத்தியில் பெரும் சவாலாக இருப்பது பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஆகும். சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், அசுவினி தத்துப்பூச்சி, வெள்ளை ஈ மற்றும் மாவுப்பூச்சி போன்றவை பயிர்களை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதில் மாவுப்பூச்சி அதிக...
ரயில் பயணிகள் அச்சம்
சாத்தூர், செப்.30: சாத்தூர் ரயில் நிலையத்திற்கு இரவு சென்னை, பெங்களூர், மதுரை, குருவாயூர், திருநெல்வேலி பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில்களில் பயணிக்க ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். தற்போது ரயில் நிலையத்தில் மூன்று நடைமேடைகளை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் முதல் நடைமேடையில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது. அந்த...
வலிப்பு நோய்க்கு வாலிபர் பலி
சிவகாசி, செப். 27: சிவகாசி அருகே வலிப்பு நோய் பாதித்து வாலிபர் உயிரிழந்தார். சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணி அண்ணா காலனியை சேர்ந்தவர் கணேசன் (36). குடிபழக்கம் உள்ள கணேசன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி ரம்யா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதனை தொடர்ந்து...
செல்போன் பறித்த 2 பேர் கைது
விருதுநகர், செப்.27: ஓட்டல் தொழிலாளியை வழிமறித்து செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் குல்லூர்சந்தையை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன்(55). பாலவநத்தத்தில் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து இருசக்கர வாகனத்தில், பெரியவள்ளிகுளம் காமராஜர் மணிமண்டபம் அருகில் வந்தார். அப்போது பாலவநத்தத்தை சேர்ந்த பாண்டி, குல்லூர்சந்தை முகாமை சேர்ந்த...
சிவகாசி அருகே குவாரியில் மின்வயர் திருடிய 3 பேர் கைது
சிவகாசி, செப்.27: கல் குவாரியில் மின்வயர் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகே மாரனேரி நதிக்குடியில் உள்ள கல்குவாரியில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டாரின் வயரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து அந்த கல்குவாரியின் மேனேஜர் லட்சுமணன் மாரனேரி...