பைக் திருட்டு
வேலூர் செப்.23: வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முபாரக்(45). இவர் காட்பாடியில் உள்ள சிக்கன் கடையில் வேலை செய்கிறார். கடந்த 18ம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டீக்கடை எதிரே பைக்கை நிறுத்திவிட்டு டீ குடித்தார். பின்னர் பைக்கை பார்த்தபோது காணவில்லை. இதை யாரோ மர்ம...
லாரியில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் 4 பேர் கைது சேலம், மதுரை, கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மேற்கு வங்கத்திலிருந்து
குடியாத்தம், செப்.23: குடியாத்தம் அருகே மேற்கு வங்கத்தில் இருந்து லாரியில் கஞ்சா கடத்திய வழக்கில் சேலம், மதுரை, கோவை மாவட்டங்களை சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெருமாள்பல்லி சோதனை சாவடியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பரதராமி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேற்கு வங்க...
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான ஸ்ட்ரெச்சர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவு
வேலூர், செப்.22: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் போதுமான எண்ணிக்கையில் ஸ்ட்ரெச்சர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழ் 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சிறப்பு மற்றும் உயர் சிறப்பு வசதிகளுடன் 64,792 படுக்கை...
டிவி திருடிய வாலிபர் கைது
வேலூர், செப்.22: வேலூரில் டிவி திருடிண ஒசூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் அடுத்த வடவிரிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார்(22). இவர் நேற்று முன்தினம் தனது நண்பரிடம் இருந்து டிவி விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர் டிவியை இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு நண்பருடன் சேர்ந்து பாகாயம் பகுதியில் உள்ள கடையில் டீ குடித்தார். பின்னர் திரும்பி வந்து...
சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு சமையல் மாஸ்டர் தற்கொலை: போலீசார் விசாரணை
குடியாத்தம், செப்.22: குடியாத்தத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு சமையல் மாஸ்டர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்தவர் ஆசிம் மகன் ரபீக் (40), சமையல் மாஸ்டர். இவரது மனைவி ரிஹானா. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று ரபீக் சமூக வலைதளங்களில் வீடியோ...
மின் ஊழியருக்கு கொலை மிரட்டல் குடியாத்தம் போலீசில் புகார் மழையால் மின் இணைப்பு துண்டிப்பு
குடியாத்தம், செப். 19 : குடியாத்தத்தில் மழையின் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் செல்போனில் மின் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதில் செதுக்கரை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பு வாசிகளில் சிலர்...
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் திருவலம் அருகே
திருவலம், செப்.19: காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த குகையநல்லூர் ஊராட்சி பொன்னை-திருவலம் சாலையில் எஸ்ஐ மஞ்சுநாதன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை போலீசார் தடுத்து நிறுத்தும்ேபாது, டிராக்டரை மணலுடன் அங்கேயே விட்டு தப்பியோடினர். இதனையடுத்து போலீசார் வண்டியை சோதனையிட்டதில் அனுமதியின்றி 1 யூனிட் ஆற்று மணலை...
இரவு நேரத்தில் கொட்டி தீர்க்கும் மழை வேலூர் மாவட்டத்தில் 3 நாட்களாக
வேலூர், செப்.19: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தமிழக பகுதிகளின் மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக நாளைக்குள் தமிழகத்தில் அநேக இடங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மிதமான மழையும், இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது....
வேலூர் மத்திய சிறையில் ஆரணி கைதி திடீர் சாவு
வேலூர், செப்.18: வேலூர் மத்திய சிறையில் ஆரணி பகுதியைச் சேர்ந்த கைதி திடீரென உயிரிழந்தார். வேலூர் மத்திய சிறையில் 750க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்னர். இதில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்த சங்கர்(77) என்பவர், பாலியல் வழக்கில் ஆரணி அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 20 ஆண்டு சிறை...