காதல் திருமணத்தால் மைனர் பெண் கர்ப்பம் வாலிபர் போக்சோவில் கைது
பேரணாம்பட்டு, செப்.26: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கீழ்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செழியன்(22). இவர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மைனர் பெண் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றபோது, திருமண...
குடியாத்தம் ஒன்றிய பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம் சட்டத்திற்கு எதிராக ஒப்பந்த பணி
குடியாத்தம், செப். 26: குடியாத்தத்தில் சட்டத்திற்கு எதிராக ஒப்பந்த கட்டிட பணி செய்து வந்த ஒன்றிய பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம் 9வது வார்டு கவுன்சிலர் ஹேமலதா, கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஊராட்சிகள் சட்டத்திற்கு எதிராக அவரது பெயரிலும் அவரது குடும்பத்தினர்...
நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க 10ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு வேலூர் எஸ்பி தகவல்
வேலூர், செப்.26: வேலூர் மாவட்ட வன எல்லைப்பகுதிகளை சேர்ந்தவர்கள் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க வரும் 10ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார். வேலூர் தலைமை வனப்பாதுகாவலர், மாவட்ட வன அலுவலர், மாவட்ட எஸ்பி மற்றும் உதவி வனப்பாதுகாவலர் ஆகியோர் நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அவற்றை ஒப்படைக்கும் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி வேலூர்...
திருவண்ணாமலை, தருமபுரி மண்டல இணை ஆணையர்கள் நியமனம் இந்து அறநிலையத்துறையில்
வேலூர், செப்.25: இந்து சமய அறநிலையத்துறையில் திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மண்டலங்களுக்கு இணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையில் சமீபத்தில் புதிய இணை ஆணையர் மண்டலங்கள், புதிய உதவி ஆணையர் நிலைகள் ஏற்படுத்தப்பட்டன. இதில் வேலூர் இணை ஆணையர் மண்டலத்தில் இருந்து திருவள்ளூர் தனி இணை ஆணையர் மண்டலமாக பிரிக்கப்பட்டது. அதேபோல் திருப்பத்தூர் உதவி...
பைக் மீது டிராக்டர் மோதி வாலிபரின் கால் துண்டானது
ஒடுகத்தூர், செப்.25: ஒடுகத்தூர் அடுத்த வளையல்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் கோபி(23), இவர் அக்ரஹாரம் ஊராட்சியில் தற்காலிக பம்ப் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று பசுவநாயனி குப்பம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு பைக்கில் வந்து மீண்டும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவர்...
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்குழுவினர் ஆய்வு வேலூர் மாவட்டத்தில் நாளை
வேலூர், செப்.25: வேலூர் மாவட்டத்தில் நாளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்குழுவினர் ஆய்வு செய்ய உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் குழு உறுப்பினார்களான காந்திராஜன், ஏ.பி.நந்தகுமார், அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, அப்துல்சமத், ராமசந்திரன், எழிலரசன், ஐயப்பன், சந்திரன், சரஸ்வதி, சிவக்குமார்(எ)தாயகம்...
ரூ.5 கோடியில் ரயில்வே சுரங்க பாதை அமைக்கும் பணி தீவிரம் லெவல் கிராசிங்குகள் பூஜ்ஜிய நிலை எட்ட நடவடிக்கை காட்பாடி பிரம்மபுரம்-சஞ்சீவிராயபுரம் இடையே
வேலூர், செப்.24: காட்பாடி பிரம்மபுரம்-சஞ்சீவிராயபுரம் இடையே 180 மீட்டர் நீளமுள்ள ரயில்வே சுரங்க பாதை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. லெவல் கிராசிங்குகள் பூஜ்ஜிய நிலை எட்ட ரயில்வேத்துறை நடவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் ஆளில்லா லெவல் கிராசிங்குகளே இல்லாத நிலையை உருவாக்கும் பணியில் இந்தியன் ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை...
நவராத்திரியையொட்டி காளி கோயில் திறப்பு அறநிலையத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு கே.வி.குப்பம் அருகே இருதரப்பு மோதலால் மூடப்பட்டது
கே.வி.குப்பம், செப்.24: கே.வி.குப்பம் அருகே இருதரப்பு மோதலால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மூடப்பட்ட கோயில், வழக்கம்போல் நவராத்திரி விழாவையொட்டி நேற்று திறக்கப்பட்டது. தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காளாம்பட்டு பகுதியில் சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பிரச்னை...
5 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது திருப்பதி- சேலம் செல்லும் அரசு பஸ்சில்
வேலூர், செப்.24: திருப்பதியில் இருந்து சேலம் செல்லும் அரசு பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் கலால் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து சேலம் நோக்கி சென்ற...