போலீஸ் ஏட்டை தாக்கியவர் கைது மனைவிக்கு வலை வேலூரில் தகராறை தடுத்த

வேலூர், செப்.11: வேலூரில் பைக் விபத்தில் ஏற்பட்ட தகராறை தடுத்த போலீஸ் ஏட்டை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் கன்சால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி(50). இவர் தனது மனைவியுடன் பைக்கில் கடந்த 8ம் தேதி சென்னை-பெங்களூரூ சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கும் மற்றொரு பைக்கும் மோதி...

வாலிபரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறிப்பு பிரபல ரவுடியின் மைத்துனர் கைது வேலூர் பாலாற்றங்கரையோரம்

By Karthik Yash
10 Sep 2025

வேலூர், செப்.11: வேலூரில் வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த பிரபல ரவுடியின் மைத்துனரை போலீசார் கைது செய்தனர். வேலூர் புதுவசூரை சேர்ந்தவர் விக்ரம்(29). இவர் பிரபல ரவுடி வசூர் ராஜாவின் மைத்துனர் ஆவார். விக்ரம் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. வேலூர் அடுத்த...

கத்தியால் நண்பனை வெட்டியவருக்கு ஓராண்டு ஜெயில்

By Karthik Yash
09 Sep 2025

வேலூர், செப்.10: நண்பனை போதையில் கத்தியால் வெட்டியவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வேலூர் சார்பனாம்பேடு தேவராஜ் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(25). ஓல்டு டவுனை சேர்ந்தவர் சலீம்(26), இருவரும் நண்பர்கள். கடந்த 2012ம் ஆண்டு ஓல்டு டவுன் பில்டர்பெட் டேங்க் அருகே நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் இருந்த சலீம், ராமச்சந்திரனிடம்...

கஞ்சா விற்ற வாலிபர் கைது குடியாத்தத்தில்

By Karthik Yash
09 Sep 2025

குடியாத்தம்,செப். 10: குடியாத்தத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். குடியாத்தம் அடுத்த தனலட்சுமி நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் பிரசாந்த்...

ராமநாதபுரத்திற்கு 180 போலீசார் பயணம் வேலூரில் இருந்து

By Karthik Yash
09 Sep 2025

வேலூர், செப்.10: வேலூரில் இருந்து ராமநாதபுரத்திற்கு 180 போலீசார் பயணம் மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாள் நாளை (11ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் ராமநாதபுரத்திற்கு சென்றுள்ளனர். அதேபோல் வேலூர் மாவட்டத்தில்...

ஆட்டு சந்தையில் தொடர்ந்து விற்பனை மந்தம் கே.வி.குப்பம்

By Karthik Yash
08 Sep 2025

கே.வி.குப்பம்,செப்.9: கே.வி.குப்பம் ஆட்டுசந்தையில் தொடர்ந்து விற்பனை மந்தமாக நடைபெற்றது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்தது. வாங்குவோர் விரும்புகிற இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமில்லாமல், விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால்தான், ஆடு வியாபாரிகள் அதிகளவில் இங்குக் கூடுகிறார்கள். கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் பிரிதி வாரம் திங்கள்கிழமை...

அதிக லாபம் ஆசைகாட்டி ஐடி ஊழியரிடம் ரூ.51.37 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை பங்கு சந்தையில் முதலீடு எனக்கூறி

By Karthik Yash
08 Sep 2025

வேலூர் செப்.9: பங்கு சந்தையில் முதலீடு எனக்கூறி அதிக லாபம் ஆசைகாட்டி ஐடி ஊழியரிடம் ரூ.51.37 லட்சம் மோசடி தொடர்பாக வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்றைய தொழில்நுட்ப காலத்தில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்கள், வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் வரும் தகவல்களை நம்பி...

பஸ்சில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல் காட்பாடி அருகே செக்போஸ்டில்

By Karthik Yash
08 Sep 2025

வேலூர், செப்.9: காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை செக்போஸ்டில் பஸ்சில் கடத்திய வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து வேலூர் மாவட்டத்தின் வழியாக கஞ்சா கடத்தலை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வேலூர் கலால் போலீசார் நேற்று காலை காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை செக்போஸ்ட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்....

காதல் திருமணம் செய்த பெண்ணை தாக்கி காரில் கடத்தல்:போலீசார் விசாரணை

By Suresh
02 Sep 2025

வேலூர், செப்.3: வேலூரில் காதல் திருமணம் செய்த பெண் மற்றும் அவரது மாமியாரை தாக்கி காரில் கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வேலூர் அடுத்த அரியூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சூரியகாந்தி. இவரது மகன் பூர்ணம். அரியூர் திருமலைக்கோடி விஸ்வநாதன் நகரை சேர்ந்தவர் குமரேசன்(45). இவரது மகள் லாவண்யா. இதில் லாவண்யாவும், பூர்ணமும் கடந்த 6...

வேலூர் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டல் தொழிலாளி மீது போக்சோ வழக்கு

By Suresh
02 Sep 2025

வேலூர், செப்.3: வேலூர் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 40வயது பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். மேலும், கணவரிடமிருந்து பிரிந்து 13 வயது மகளுடன் வசித்து வருகிறார்....