2 வீடுகள் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு மர்ம நபர்களுக்கு வலை காட்பாடியில் அடுத்தடுத்து
வேலூர், ஜூலை 20: காட்பாடியில் அடுத்தடுத்து 2 வீடுகள் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். காட்பாடி அடுத்த தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவக்குமார்(53), முடி திருத்தும் தொழிலாளி. இவரது சகோதரர் சுதாகர்(45), லாரி டிரைவர். இருவரும் அருகருகே வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம்...
காவலரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி உட்பட 2 பேர் கைது வேலூர் மத்திய சிறையில் பணியிலிருந்த
வேலூர், ஜூலை 20: வேலூர் மத்திய சிறையில் பணியிலிருந்த காவலரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் உள்ள நன்னடத்தை கைதிகளை கொண்டு சிறைக்குள் போலீசாருக்கான ஷூக்கள் தயாரிப்பு, பெட்ரோல் பங்க், விவசாயம்,...
குடியாத்தம் அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: போக்சோவில் முதியவர் கைது
குடியாத்தம், ஜூலை 19: குடியாத்தம் அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. 4ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பெற்றோர் வெளியே சென்ற நிலையில் சிறுமி மட்டும் வீட்டில்...
திருவாரூர் மாவட்டத்தில் இருந்து காட்பாடிக்கு ரயில் மூலம் 1,250 டன் ரேஷன் அரிசி வருகை: குடியாத்தம் கிடங்குக்கு அனுப்பி வைப்பு
வேலூர், ஜூலை 19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து காட்பாடிக்கு ரயில் மூலம் 1,250 டன் ரேஷன் அரிசி வந்தது. இதை லாரிகள் மூலம் குடியாத்தம் தாலுகா கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும்...
வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு; இருதரப்பினர் அடுத்தடுத்து சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு: ஆர்டிஓ, ஏடிஎஸ்பி பேச்சுவார்த்தை
வேலூர், ஜூலை 19: வேலூரில் இருதரப்பினர் அடுத்தடுத்து நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் அடுத்த மேல்மொணவூர் பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. அதே ஊர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும், முகாமில் உள்ளவர்களுக்கும் ஏற்கனவே கடந்த சில வாரங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை...
சிறுமி, இளம்பெண்ணை கடத்தியதாக 2 வாலிபர்கள் மீது புகார்: போலீசார் விசாரணை
வேலூர், ஜூலை 18: வேலூரில் சிறுமி, இளம்பெண்ணை கடத்தியதாக 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலூரை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண் நர்சிங் படித்துள்ளார். இவர் கடந்த 15ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது...
பழமையான முருகர் சிலை பாறைகளுக்கு நடுவே கண்டெடுப்பு: ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம்
ஒடுகத்தூர், ஜூலை 18: ஒடுகத்தூர் அருகே திடீரென சாமியாடிய நபர் மலை மீது ஏறி பாறைகளுக்கு நடுவே முருகர் கற்சிலையை கண்டெடுத்ததால் ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட தாங்கல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. தற்போது இந்த கல்குவாரி...
வனப்பகுதிக்குள் வழிதவறி தொழிலாளி 3 நாட்களாக சிக்கி தவிப்பு
ஒடுகத்தூர், ஜூலை 18: ஒடுகத்தூர் வனப்பகுதிக்குள் ஆடுகளை மேய்க்க சென்ற தொழிலாளி வழிதவறி 3 நாட்களாக சிக்கி தவித்துள்ளார். அவரை கிராம மக்கள் மீட்டனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பாபு(53). இவர் விவசாயம் செய்து கொண்டு சொந்தமாக ஆடு, மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் கடந்த...
காட்பாடியில் ரூ.23 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது டெல்லி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
வேலூர், ஜூலை 17: காட்பாடியில் ரூ.23 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியரை டெல்லி சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். டெல்லியை சேர்ந்த ஒரு நபரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.23 லட்சம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நபர் டெல்லி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்....