வீடுபுகுந்து தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை முகமூடி ஆசாமிகளுக்கு போலீஸ் வலை காட்பாடியில் இரவு பரபரப்பு
வேலூர், அக்.7: காட்பாடியில் இரவு வீடுபுகுந்து தம்பதியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவருடைய மனைவி சாந்தம்மாள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அமர்ந்திருந்தனர். அப்போது, முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென...
கர்நாடக மதுபாக்கெட்டுகள் பதுக்கி விற்றவர் கைது பேரணாம்பட்டு அருகே
பேரணாம்பட்டு, அக்.4: பேரணாம்பட்டு அருகே கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக எஸ்பி மயில்வாகனனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன், தலைமை காவலர்கள் பார்த்திபன், கமல், சரவணன் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ...
சிறுத்தை கவ்விச்சென்றதில் ஆட்டுக்குட்டி பலி கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை பேரணாம்பட்டு அருகே
பேரணாம்பட்டு, அக்.4: பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற ஆட்டுக்குட்டியை சிறுத்தை கவ்விச்சென்று கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூர் உள்பட வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களில் யானைகள் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி பத்தலப்பல்லி கிராமத்தை...
ஆடுகள் வரத்து குறைவு ரூ.9 லட்சத்திற்கு வர்த்தகம் ஒடுகத்தூர் வாரச்சந்தையில்
ஒடுகத்தூர், அக்.4: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு, உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் தங்கள் வளர்க்கும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால், வாரந்தோறும் ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. அதேபோல், கிறிஸ்துமஸ், ரம்ஜான்,...
கே.வி.குப்பம் ஆட்டு சந்தையில் தொடர்ந்து விற்பனை மந்தம்
கே.வி.குப்பம், செப்.30:ேக.வி.குப்பம் ஆட்டு சந்தையில் தொடர்ந்து விற்பனை மந்தமாக நடந்ததால் வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர். கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை வேலூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்தது. வாங்குவோர் விரும்புகிற இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமில்லாமல், விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால்தான், ஆடு வியாபாரிகள் அதிகளவில் இங்குக் கூடுகிறார்கள். நேற்று காலை வழக்கம்போல சந்தை கூடியது....
மேல்பாடி அருகே கோழி இறைச்சி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை
பொன்னை, செப்.30: காட்பாடி தாலுகா மேல்பாடி அடுத்த பாத நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். ராஜேந்திர பிரசாத் (53). இவர் அதே பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நீண்ட நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததுள்ளார் இந்நிலையில் நேற்று விடியற்காலை 4 மணியளவில் வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும்...
கர்ப்பமான சிறுமி பலியான வழக்கில் பெயிண்டருக்கு 20 ஆண்டுகள் சிறை வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பு
வேலூர்: காட்பாடி அருகே கர்ப்பமான சிறுமி பலியான வழக்கில், பெயிண்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன்(25), பெயிண்டர். இவர் அருகிலுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு சிறுமியை திருமணம்...
காட்பாடி மேம்பாலம் அகலப்படுத்தும் பணிகள் ஒரு வாரத்தில் தொடங்கும் சட்டமன்ற பொது கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை உறுதி வேலூர் போக்குவரத்தில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை
வேலூர், செப்.27: காட்பாடி ரயில்வே மேம்பாலம் அகலப்படுத்தும் பணி அடுத்த வாரம் பணி தொடங்கி 8 மாத காலத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்டத்தில் அரசுத்திட்டப்பணிகள் குறித்து களஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற பொதுக்கணக்குக்குழு தலைவர் செல்வபெருந்தகை கூறினார். சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்குக்குழு வேலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் நடந்து வரும்...
மாணவர்களின் பட்டியலை உரிய திருத்தங்களுடன் அனுப்ப வேண்டும் சிஇஓக்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவுறுத்தல் நடப்பாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும்
வேலூர், செப்.27: 2025-26ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை திருத்தம் முதல் அனைத்தையும் மேற்கொண்டு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என்று சிஇஓக்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவுறுத்தியள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநரகம் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 2025-2026ம் ஆண்டு மார்ச்சில் நடைபெறும் பிளஸ்2 2ம்...