ஏலகிரிமலை படகு இல்லம் மூடல் சுற்றுலா பயணிகள் இன்றி `வெறிச்’
டிட்வா புயல் காரணமாக ஏலகிரிமலையில் உள்ள படகு இல்லம் நேற்று மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது.தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியிருந்தது....
கள்ளக்காதலனை அடித்துக் கொன்ற பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு போதையில் டார்ச்சர் செய்த
வேலூர், நவ.29: போதையில் டார்ச்சர் செய்த கள்ளக்காதலனை அடித்துக் கொலை செய்த பெண் உட்பட 3 பேருக்கு வேலூர் கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் இப்ராகிம், கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. இருவரும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு...
ரூ.1,400 கோடியில் பாலாறு- தென்பெண்ணை இணைப்பு திட்டம் விரைவில் தொடங்கும் அதிகாரிகள் தகவல் இறுதி கட்டத்தில் திட்ட மதிப்பீடு பணிகள்
வேலூர், நவ.29: ரூ.1,400 கோடி மதிப்பீட்டிலான பாலாறு- தென்பெண்ணை இணைப்புத் திட்டத்துக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தேசிய நதிநீர் இணைப்புக்கு முன்பாக மாநில நதிகளை இணைப்பதில் அந்தந்த மாநிலங்கள் முனைப்பு காட்டின. அதன்படி, தமிழகத்தில் பாலாறு-தென்பெண்ணை உட்பட மாநில ஆறுகள் இணைப்புத்திட்டம் மாநில நிதி ஆதாரத்திலேயே நிறைவேற்றப்படும் என்று அப்போதைய முதல்வர்...
கடித்த பாம்புடன் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவர் குடியாத்தத்தில் பரபரப்பு
குடியாத்தம், நவ.29: குடியாத்தம் அருகே மனைவியை கடித்து பாம்புடன் சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் போடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தர்மபிரகாஷ். இவரது மனைவி உமாதேவி(45). நேற்று இரவு வீட்டில் இருந்தபோது உமாதேவியின் காலில் 2 அடி நீளமுள்ள பாம்பு கடித்துள்ளது. இதனால் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த தர்மபிரகாஷ்,...
எஸ்எஸ்ஐக்கள் உள்பட 9 பேர் டிரான்ஸ்பர் எஸ்பி மயில்வாகனன் உத்தரவு வேலூர் மாவட்டத்தில்
வேலூர், நவ.28: வேலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஐக்கள் உள்பட 9 பேர் பணியிட மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் எஸ்ஐ, தலைமை காவலர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து எஸ்பி மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் வடக்கு காவல் நிலைய காவலர் நிசர்அகமத்-அரியூர் காவல் நிலையத்திற்கும், சத்துவாச்சாரி போக்குவரத்து எஸ்எஸ்ஐ...
உதவி கோட்ட பொறியாளரின் காரில் திடீர் தீ குடியாத்தம் நெடுஞ்சாலை துறை
குடியாத்தம், நவ.28: வேலூர் மாவட்டம் குடியாத்தம்- காட்பாடி சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அலுவலகத்திற்கு வெளியேநிறித்தி வைக்கப்பட்டிருந்த உதவி கோட்ட பொறியாளரின் கார் திடீரென கரு புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அங்கிருந்த பணியாளர்கள் குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு...
சிறுமியை மிரட்டி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு காதலனுடன் தனிமையில் இருந்த
வேலூர், நவ. 28: காதலனுடன் இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரும் அதே கிராமத்தை சேர்ந்த 24 வயது வாலிபரும் காதலித்தனர். மேலும்...
9.63 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு 37,075 மையங்களில் 14ம் தேதி நடக்கிறது புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ்
வேலூர், நவ.27: தமிழகத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 9.63 லட்சம் பேருக்கு வரும் 14ம் தேதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளி செல்லாத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கடந்த 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த...
மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் வாகனங்கள் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் 17 வாகனங்கள் அதிக விலையால் விற்பனையாகவில்லை வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில்
வேலூர், நவ.27: வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நடந்த மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. 17 வாகனங்கள் அதிக விலையால் ஏலம் போகவில்லை. வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய கடத்தல், மதுபாட்டில்கள் கடத்தல், போதை பொருள் கடத்தல் என பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில்...