ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தம் கே.வி.குப்பத்தில் நடந்த
கே.வி.குப்பம், ஆக.12: கே.வி.குப்பத்தில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது. கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடந்து வருகிறது. இங்கு பல்வேறு இன ஆடுகள் திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமில்லாமல் விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால் ஆடு வியாபாரிகள் அதிகளவில் கூடுகிறார்கள். கடந்த மாதங்களில் நடந்த சந்தைகளில் எதிர்பார்த்த...
மளிகை கடைக்காரரின் குடும்பத்திற்கு ரூ.25.86 லட்சம் இழப்பீடு வேலூர் கோர்ட் தீர்ப்பு விபத்தில் உயிரிழந்த
வேலூர், ஆக.12: விபத்தில் உயிரிழந்த மளிகை கடைக்காாரின் குடும்பத்திற்கு ரூ.25.86 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. காட்பாடி அடுத்த பெரியபுதூரைச் சேர்ந்தவர் சசிகுமார்(20) மளிகை கடை நடத்தி வந்தார். இவர், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி காட்பாடி-சித்தூர் சாலையில் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார். பைக்கை அவரது...
ஆசிட் அடிப்பதாக மிரட்டிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை ஒருதலையாக காதலித்த பள்ளி மாணவியின் மீது
வேலூர், ஆக. 12: ஒருதலையாக காதலித்த பள்ளி மாணவியின் மீது ஆசிட் அடிப்பதாக மிரட்டிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. குடியாத்தம் அடுத்த கஸ்பா கவுதம்பேட்டையை சேர்ந்தவர் பிரவீன்(19), பைக் மெக்கானிக். இவர் 11ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். அந்த மாணவிக்கு பிரவீன் செல்போன் ஒன்றை வாங்கினார்....
மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றவர் கைது: அணைக்கட்டு அருகே மளிகை கடையில்
அணைக்கட்டு, ஆக. 11:அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணபுரம் பகுதியில் பெட்டிக் கடைகளில் சிலர் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து விடுமுறை நாட்களில் அதிக அளவில் வியாபாரம் நடப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து நேற்று சப் இன்ஸ்பெக்டர் தர்மன் மற்றும்...
அரசின் மாநில கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு
வேலூர், ஆக.11:தமிழக அரசு வௌியிட்டுள்ள மாநில கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சரவணன், மாநில பொருளாளர் ராமஜெயம், அமைப்பு செயலாளர் ஜெகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநில கல்விக் கொள்கை-2025 தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மனதார வரவேற்கிறது. 76 பக்கங்கள்...
வேலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 1700 கிலோ போதை பொருள் பறிமுதல் 29 பேருக்கு குண்டாஸ்: எஸ்பி அலுவலகம் தகவல்
வேலூர், ஆக.11:வேலூர் எஸ்பி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழக அரசின் போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற முன்முயற்சியின் கீழ் வேலூர் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருள்...
சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தந்தையின் நண்பர் கைது பேரணாம்பட்டு அருகே
குடியாத்தம், ஆக.9: பேரணாம்பட்டு அருகே சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தந்தையின் நண்பர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் உள்ளார். கடந்த சில தினங்களாக சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே,...
அதிகபட்சமாக பொன்னையில் 122 மி.மீ மழை பதிவு பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி வேலூர் மாவட்டத்தில் தொடரும் மழை
வேலூர், ஆக.9: வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வேலூர் சர்க்கரை ஆலையில் 80 மி.மீ மழை பதிவாகி உள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும், இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு 8 மணி முதல் மழை பெய்து வருகிறது....
ரேபீஸ் தாக்கி இளம்பெண் பலி வளர்ப்பு நாய் கடித்து குதறியது
குடியாத்தம், ஆக.9: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், அவர்களது வளர்ப்பு நாய்க்கு உணவு வைக்கும்போது எதிர்பாராதவிதமாக கடித்து குதறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பெற்றும், நேற்று நாய் கடித்த இடத்தில் பாதிப்பு அதிகமானது. எனவே, அவரது பெற்றோர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு...