மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல் போலீசார் சமரசம் சாயிநாதபுரம், கன்சால்பேட்டை பகுதிகளில்
வேலூர் அக்.23: வேலூர் சாயிநாதபுரம், கன்சால்பேட்டை பகுதிகளில் தெருக்களில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாநகராட்சி சாயிநாதபுரம் ஆர்.வி.நகர், சிதம்பரனார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தெருக்களில் தேங்கி நிற்பதாகவும், வீடுகளுக்குள் புகுந்ததாகவும் அதனை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால்...
வேலூர் மத்திய சிறையில் இருந்து பரோலில் செல்லும் 20 சிறைவாசிகள் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட
வேலூர், அக்.18: தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேலூர் மத்திய சிறையில் 20 சிறைவாசிகள் பரோலில் தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், பிற முக்கிய குடும்ப நிகழ்வுகளிலும் குடும்பத்துடன் கலந்து கொள்ள சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்படுகிறது. சிறைவாசிகளின் நல்லொழுக்கத்தின் அடிப்படையில் தற்காலிக விடுப்பு எனப்படும் பரோல் வழங்கப்படுகிறது. இவ்வாறு...
போதையில் போலீஸ் பூத்தை அடித்து நொறுக்கியவர் கைது வேலூர் புதிய பஸ் நிலையத்தில்
வேலூர், அக்.18: குடிபோதையில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் பூத் மற்றும் கடைகளை அடித்து நொறுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தீபாவளியை கொண்டாட வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் வருபவர்களும், வெளியூர் செல்பவர்களும் என பரபரப்பாக பஸ் நிலையம்...
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5.28 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை வாட்ஸ் ஆப் குரூப் மூலம் முதலீடு மெசேஜ் அனுப்பி
வேலூர், அக்.18: வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைத்து குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஆசை காட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5.82 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி குமரன் நகரை சேர்ந்த 27 வயது இளைஞர். இவர் தனியார் நிறுவனத்தில் சீனியர்...
வேலூரில் இடி, மின்னலுடன் மழை
வேலூர், அக்.17: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் வேலூரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து வெயில்...
டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 30 சதவீதம் மதுபான வகைகள் இருப்பு வைக்க நடவடிக்கை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
வேலூர், அக்.17: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 30 சதவீதம் மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினசரி ₹100 முதல் ₹150 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகிறது. தீபாவளி, பொங்கல், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ...
2 கிலோ குட்கா பதுக்கியவர் கைது பெட்டிக்கடையில்
ஒடுகத்தூர், அக்.17: ஒடுகத்தூர் அடுத்த அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட எடத்தெரு பகுதியில் உள்ள பெட்டி கடையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி விற்பனை செய்து வருவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவரது கடையில்...
காட்பாடியில் அதிகபட்சமாக 41 மி.மீ மழை பதிவு
வேலூர், அக்.16: தமிழகத்தில் இன்றுதான் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிைல ஆய்வு மையம் அறிவித்தாலும், அதற்கு முன்னதாகவே வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதனால் தற்போதே மாநிலத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில்...
அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை காட்பாடியில் உள்ள
வேலூர், அக்.16: காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் காரணமாக மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக இமெயில் முகவரிக்கு மிரட்டல்...