செல்போன் பேசியதை கணவர் கண்டித்ததால் குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
களக்காடு, நவ. 6: களக்காட்டில் செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். நெல்லை மாவட்டம் களக்காடு பாரதிபுரம், கீழத்தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் மந்திரமூர்த்தி (32). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மகாதேவி (25) என்ற மனைவியும், 4...
பழையபேட்டையில் சிறுமி மாயம்
பேட்டை, நவ. 5: பழையபேட்டையில் வீட்டைவிட்டு சென்றபோது மாயமான சிறுமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை டவுன் அடுத்த பழைய பேட்டை நெல்லையாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகள் தனலட்சுமி (16). பாளையங்கோட்டையில் செயல்படும் தனியார் நர்சிங் கல்லூரியில் கல்வி பயின்று வந்த இவர், நேற்று காலை 11 மணி அளவில் வீட்டைவிட்டு...
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் பீதி
கேடிசி நகர், நவ.5: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெருநாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் பீதியடைந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நேராமல் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கில் வரும் பயணிகள் வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ரயிலில் பயணிக்கின்றனர். அத்துடன் அகில...
டெய்லர் தூக்கிட்டு தற்கொலை
நெல்லை, நவ.5: நெல்லையில் மது குடிக்கும் பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்ததால் ஏற்பட்ட விரக்தியில் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை வண்ணார்பேட்டை சாலைத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (48). டெய்லர் வேலை பார்த்துவந்த இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி குடித்து வந்ததை குடும்பத்தினர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்திக்கு...
திருச்செந்தூர் நகராட்சி 1வது வார்டு சிறப்பு கூட்டம்
திருச்செந்தூர், நவ. 1: திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பொதுமக்களுக்கு அடிப்படை சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் குமாரபுரம் 1வது வார்டு குமாரபுரத்தில் நடந்தது. அங்குள்ள பூங்காவில் நடந்த கூட்டத்துக்கு நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ஈழவேந்தன் முன்னிலை...
புதிய மேலாளர் காபிரியேல் தேவ இரக்கம் சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனையை ஆய்வு
தூத்துக்குடி,நவ.1: தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் புதிய மேலாளராக பொறுப்பேற்றுள்ள காபிரியேல் தேவஇரக்கம் சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனையை ஆய்வு செய்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சி.எஸ்.ஐ தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகியாக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி திருமண்டல அலுவலகத்தில் மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார். இதேபோன்று தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் புதிய மேலாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நெல்லை...
மரக்கன்று நடுவது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்
தூத்துக்குடி, நவ. 1: தமிழ்நாடு அரசின் பசுமை தமிழகம், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வனத்துறை, மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் பனை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், மரக்கன்று நடுதல், நீர் நிலைகளை பாதுகாக்க 5 லட்சம் பனை மர விதைகள் விதைக்கும் பணி தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா ஆத்தூர்...
நெல்லையில் இன்று மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் ஆவுடையப்பன் அறிக்கை
நெல்லை, அக். 31: நெல்லை மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நெல்லையில் இன்று(31ம் தேதி) மாலை நடக்கிறது. இதுகுறித்து நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, அம்பை, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நெல்லை மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு...
புளியங்குடி நகராட்சி ஆணையர் நாகராஜ் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவிப்பு
புளியங்குடி, அக்.31: புளியங்குடிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நகராட்சி ஆணையர் நாகராஜ் தலைமையில் தூய்மை பணியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசியில் பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் நேற்றிரவு மாலை 7 மணியளவில் புளியங்குடி வழியாக மதுரை சென்றார். புளியங்குடியில் இ.யூ முஸ்லிம்...