வி.கே.புரம் பள்ளி விடுதியில் இருந்து மாயமான பிளஸ்1 மாணவரை கேரளாவில் மீட்ட போலீசார்
வி.கே.புரம், நவ. 12: வி.கே.புரம் பள்ளி விடுதியில் மாயமான பிளஸ்1 மாணவரை போலீசார் கேரளாவில் மீட்டனர். ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் சாலை தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து(45). இவரது மனைவி துர்காதேவி. இவர்களுக்கு நாகராஜன்(17), இசக்கிராஜ் என 2 மகன்கள் உள்ளனர். நாகராஜன், வி.கே.புரத்தில் செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். பள்ளி விடுதியிலேயே...
தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு நாளை ஆய்வு
தென்காசி, நவ.12: தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலகத்தின் 2024-26ம் ஆண்டுக்கான பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நாளை தென்காசி மாவட்டத்தில் ஆய்வு பயணம் மேற்கொள்கின்றனர். அன்று மதியம் 2.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. ...
கங்கைகொண்டான் கைலாசபுரம் ரயில்வே கேட் இன்று மூடல்
நெல்லை,நவ.11: கங்கைகொண்டான் கைலாசபுரம் ரயில்வே கேட் இன்று காலை முதல் மாலை வரை தண்டவாளம் பராமரிப்பு பணிக்காக மூடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மாற்று பாதையில் செல்ல தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் கைலாசபுரம் ரயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணி இன்று 11ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கைலாசபுரம் ரயில்வே...
சிவகிரி அருகே வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும்
தென்காசி,நவ.11: சிவகிரி அருகே மேலக்கரிசல் குளத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில் நேற்று ஏராளமானோர் திரண்டு வந்து தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ராயகிரி பேரூராட்சி மேலக்கரிசல்குளம் உள்ள ஊரில் 2004ம் ஆண்டில் ஐந்து ஏக்கர் இடம் வாங்கி 100 பிளாட்டுக்கள் சர்வே எண் 1165ல் போடப்பட்டது. 100 பிளாட் பதிவு...
நாங்குநேரி அருகே ஆழ்வாநேரியில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
நெல்லை, நவ.11: நாங்குநேரி அருகே ஆழ்வாநேரி, புதுக்குறிச்சியில் ஏற்கனவே திறந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனு விவரம்: ஆழ்வாநேரி, புதுக்குறிச்சி, டாஸ்மாக் கடை அருகே 700 மீட்டர் தூரத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடம், குளம் உள்ளது. டாஸ்மாக் கடையால் பள்ளிக்கூடத்திற்கும், குளத்திற்கும் செல்ல மாணவ, மாணவிகளும்,...
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
நெல்லை, நவ. 6: சங்கரன்கோவிலில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மனைவி ஹமீதா (72). இவர் சம்பவத்தன்று வீட்டு மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த...
செல்போன் பேசியதை கணவர் கண்டித்ததால் குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
களக்காடு, நவ. 6: களக்காட்டில் செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். நெல்லை மாவட்டம் களக்காடு பாரதிபுரம், கீழத்தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் மந்திரமூர்த்தி (32). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மகாதேவி (25) என்ற மனைவியும், 4...
களக்காடு நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு
களக்காடு,நவ.6: களக்காடு நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சுமா சென்னை குன்றத்தூர் நகராட்சி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சுரண்டை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ராமதிலகம் களக்காடு நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் புதிய ஆணையராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக ஊழியர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். ...
மூலைக்கரைப்பட்டி அருகே சமையல் மாஸ்டரை தாக்கிய விவசாயிக்கு வலை
களக்காடு,நவ.6: மூலைக்கரைப்பட்டி அருகே பணத்தகராறில் சமையல் மாஸ்டரை தாக்கிய விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர். மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள தெய்வநாயகபேரி வடக்குத்தெருவை சேர்ந்தவர் செல்லையா மகன் சரவணன் (21). சமையல் மாஸ்டராக உள்ளார். இவரது பாட்டி காசி குலுக்கல் சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் அதே ஊரைச் சேர்ந்த கந்தசாமி மகன் ஆறுமுகத்துரையும், அவரது தம்பி விவசாயி...