பதவி உயர்வு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்
கோவில்பட்டி, நவ. 18: சிறுபான்மை பள்ளி பதவி உயர்வு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவனிடம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. கோவில்பட்டியில் அமைச்சர் கீதாஜீவனிடம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவில்பட்டி கல்வி மாவட்ட செயலாளர் புனித அந்தோணி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:...
2000 பனை விதைகள் விதைப்பு
சாத்தான்குளம், நவ. 18. சாத்தான்குளம் தாலுகா பண்டாரபுரம் ஊராட்சி பகுதியில் 1 லட்சம் பனை விதை நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக பண்டாரபுரம் குளம் பகுதியில் 2000 பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பஞ். முன்னாள் தலைவர் உதயம் பாலசிங், பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தார். விவசாய சங்க துணை தலைவர்...
ஏரலில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
ஏரல், நவ. 18: ஏரலில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏரல் பேரூராட்சி பகுதிகளில் இரவு, பகலாக சாலைகளில் சுற்றி திரியும் மாடு, ஆடு உள்பட கால்நடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி...
வனவிலங்குகளையும், விளைநிலங்களையும் பாதுகாக்க ‘யானை தோழர்கள் குழு’ தொடக்கம்
தென்காசி,நவ.15: வனவிலங்குகளையும், விளைநிலங்களையும் பாதுகாக்க ‘யானை தோழர்கள் குழு’ தொடங்கப்பட்டுள்ளது என்று தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வன விலங்கு மனித முரண் உள்ள பகுதிகளில் மோதலை தணித்து வனவிலங்குகளையும், விவசாய நிலங்களையும் ஒரே நேரத்தில் பாதுகாக்க சமூக பங்கேற்பை உருவாக்கும் விதமாக...
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் கோமதிஅம்மன் கிளி வாகனத்தில் வீதி உலா
சங்கரன்கோவில், நவ.15: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழாவில் கோமதி அம்பாள் கிளி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி திருக்கல்யாணம் தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில்...
பாவூர்சத்திரத்தில் காவலர் குடியிருப்பு கட்டப்படுமா
பாவூர்சத்திரம்,நவ.15: பாவூர்சத்திரத்தில் காவலர்கள் குடியிருப்புகள் கட்டப்படாததால் வாடகை வீட்டில் வசிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூரில் போலீசாருக்கு வீடு தர உரிமையாளர்கள் பலர் மறுப்பதால் வெளியூரில் இருந்து வேலைக்கு வர வேண்டிய நிலை உள்ளது. பணி மாறுதலாகி வருவோர் காவல்நிலையத்திலேயே தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...
செங்கோட்டை அருகே பரிதாபம் லாரி மோதி தொழிலாளி பலி
கேடிசி நகர், நவ.13: சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (86). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் தனது குடும்பத்தை பிரிந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த அச்சன்புதூர் அருகே உள்ள பண்பொழி பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அங்குள்ள கடைகளில் வேலை பார்த்து விட்டு அங்கேயே தங்கியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்...
நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள் 11 பேர் மீது வழக்குபதிவு கடையத்தில் பரபரப்பு
நெல்லை, நவ. 13: நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய திருநங்கைகள் 11 பேர் மீது பாளை. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நெல்லை, நரசிங்கநல்லூர் பகுதியில் திருநங்கைகளுக்கு அரசு தரப்பில் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 60க்கும்...
சொத்து தகராறில் தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு
கடையம்,நவ.13: தென்காசி மாவட்டம் கீழ கடையம் பவுண்டி தெருவை சேர்ந்த சூசைரத்தினம் மகன் ராஜ்குமார் (57). இவருக்கும், கீழ மாதாபுரத்தை சேர்ந்த அவரது அண்ணன் ராமராஜ் (66) என்பவருக்கும் கீழ கடையம் வடக்கு உடையார் பிள்ளையார் கோயில் அருகேயுள்ள வீட்டை பங்கு பிரிப்பதில் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ராஜ்குமார், அவரது மகன் சூர்யா...