கார்த்திகை 2வது சோமவார திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி கோயிலில் 1008 பால்குடம் ஊர்வலம்
கோவில்பட்டி, நவ. 25: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் கார்த்திகை 2வது சோமவார திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குடம் ஊர்வலத்தை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் யோகீஸ்வரர் உறவின்முறை சங்கம் சார்பில் 83ம் ஆண்டு கார்த்திகை 2வது சோமவார மண்டகப்படி...
சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
சங்கரன்கோவில்,நவ.22: சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில் தலைமை ஆசிரியர்கள் தெய்வ பிரியா, கீதா வேணி தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்பி டாக்டர் ராணி...
நெல்லை சிஎஸ்ஐ பிஷப் 5ம் ஆண்டு அபிஷேக தின விழா
கேடிசிநகர், நவ.22: நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல பிஷப் பர்னபாஸ் பதவியேற்று 5ம் ஆண்டு அபிஷேக தின விழா பாளை அண்ணாநகர் சிஎஸ்ஐ ஆலயத்தில் நேற்று காலை நடந்தது. கேரளா மாநிலம் கொச்சி திருமண்டல பேராயர் குரியன்பீட்டர் கலந்து கொண்டு அபிஷேக ஆராதனை நடத்தி தேவசெய்தி வழங்கினார். சிறப்பு விருந்தினராக கிறிஸ்தவ நல்லென்ன இயக்க நிறுவனரும், திருச்சி...
3 வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு ஏழரை ஆண்டுகள் சிறை
நெல்லை, நவ. 22: நெல்லை மாவட்டம், மானூர் அருகேயுள்ள துலுக்கர்பட்டி பள்ளிக்கூடத்தெருவைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் (55). இவர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி, தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 3 வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட குழந்தை தனக்கு நேர்ந்த அவலத்தை...
குற்றாலம் மெயினருவி தடாகத்தில் விழுந்த 10 அடி மலைப்பாம்பு
தென்காசி,நவ.21: குற்றாலம் மெயினருவி தண்ணீரில் அடித்து வரப்பட்டு தடாகத்தில் விழுந்த 10 அடி நீள மலைப்பாம்பை கண்டு அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களாக மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க...
விகேபுரம் கிளை நூலகருக்கு ‘நல் நூலகர்’ விருது
விகேபுரம்,நவ.21: தமிழ்நாடு பொதுநூலக இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக பணிபுரியும் நூலகர்களுக்கு இந்திய நூலகத் தந்தை டாக்டர் அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொது நூலக இயக்குநர் ஜெயந்தி தலைமையில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன் வரவேற்றார். நூலக ஆணைக் குழு தலைவர் மனுஷ்ய புத்திரன் வாழ்த்திப்...
சர்வதேச சாரணர் முகாம் நெல்லையில் இருந்து உ.பி.க்கு 22 மாணவர்கள் பயணம்
நெல்லை, நவ.21: உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் சர்வதேச சாரணர் முகாமில் பங்கேற்க நெல்லையிலிருந்து 22 மாணவர்கள் ரயிலில் புறப்பட்டுச் சென்றனர். உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச சாரண, சாரணியர் அமைப்பின் ஜாம்புரி முகாம் நவம்பர் 23 முதல் 29 வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த சாரண, சாரணிய இயக்கத்தினர் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் கலந்து...
கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் தார் சாலை பணி தொடக்கம்
பாவூர்சத்திரம், நவ.19: கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட கருமடையூரில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்றத்தலைவர் ராஜன் தலைமை வகித்து தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார். கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ், துணைதலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3வது...
வள்ளியூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் மக்கள் நலப்பணி
வள்ளியூர், நவ. 19: வள்ளியூர் யூனியன் கூட்டம் நடந்தது. இதில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் நல பணிகள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்கு வள்ளியூர் ஒன்றிய பெருந்தலைவர் ராஜா ஞானதிரவியம் தலைமை வகித்தார். வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சாந்தி கலா, வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணை...