தமிழ்நாடு டென்னிகாய்ட் அணியில் மானூர் மாணவர்கள் தேர்வு
மானூர்.ஆக.6: தமிழ்நாடு டென்னிகாய்ட் அணியில் மானூர் மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு வளையப்பந்து (டென்னிகாய்ட்) அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டிகள் சென்னை வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்கு தலா 8 பேர் வீதம் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் பலர்...
மின்கம்பத்திலிருந்து விழுந்த பெயிண்டர் பலி
பாப்பாக்குடி, ஆக. 6:முக்கூடல் அருகே பாப்பாக்குடி இலந்தகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் சேர்மகனி மகன் களஞ்சியம்(30). பெயிண்டர். இவருக்கு மனைவி, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளனர். களஞ்சியத்திற்கு எலக்ட்ரீசியன் வேலையும் தெரியும் என்பதால் அவ்வப்போது அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் வேலைக்கும் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலையில் வேதகோயில் தெருவிலுள்ள ஒருவரது வீட்டில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதையடுத்து...
ஆலங்குளத்தில் பரபரப்பு
ஆலங்குளம், ஆக.5: ஆலங்குளம் பரும்பு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர், எஸ்ஐ சத்யவேந்தன் மற்றும் போலீசார் நேற்று மாலை தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ராஜீவ்காந்தி நகர் வாட்டர் டேங்க் அடியில் சந்தேகத்திற்கிடமாக வகையில் மூன்று பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து உடனடியாக...
8.5 கிலோ கஞ்சாவுடன் டிரைவர் கைது 4 பேருக்கு குண்டாஸ்
அம்பை,ஆக.5: கல்லிடைகுறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட அம்பை முடபாலத்தைச் சேர்ந்த காளிதாஸ் மகன் இசக்கிமுத்து என்ற முகேஷ் (20), பாஸ்கர் மகன் சுனில்ராஜ் (19), மகேஷ் மகன் முத்து (21), மேகலிங்கம் மகன் கணேசமூர்த்தி (22) ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது...
கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் மன உளைச்சலை போக்க ஆல்பாஸ் வழங்கினோம்
களக்காடு, ஆக.5 கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் மன உளைச்சலை போக்க ஆல் பாஸ் வழங்கினோம் என்று களக்காட்டில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். நெல்லை மாவட்டத்தில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுபயணம் செய்து வரும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவில் களக்காட்டில் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், களக்காடு பகுதி...
பாளை. மேடை தளவாய் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் முழுநேர கூட்டுறவு பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக.22 வரை அவகாசம்
நெல்லை, ஆக.3: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓர் அங்கமாக செயல்படும் பாளை. மேடை தளவாய் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் 2025-26ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்ந்து பயில விரும்புவோர் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 22ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில்...
நெல்லையில் கொலை முயற்சி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டாஸ்
நெல்லை, ஆக. 3: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி மற்றும் பொது சொத்தை சேதப்படுத்திய வழக்குகளில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லை மாவட்டம், அம்பை. முடப்பாலத்தைச் சேர்ந்த காளிதாசின் மகன் இசக்கிமுத்து என்ற முகேஷ் (20), பாஸ்கரின் மகன் சுனில்ராஜ் (19), மகேசின் மகன்...
பாளை சதக்கத்துல்லா கல்லூரியில் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற பாடநூல் வெளியீட்டு விழா
தியாகராஜ நகர், ஆக. 3: தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் வகுத்துத் தந்துள்ள பாடத்திட்டத்தின் படி பாளை சதக்கத்துல்லா கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் ‘மதிப்புக் கல்வி’ என்ற தலைப்பில் எழுதிய பாடநூலின் வெளியீட்டு விழா நடந்தது. பாளை சதக்கத்துல்லா கல்லூரி வளாகத்தில் நடந்த இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் ஜேனட் ராணி...
களக்காட்டில் தரைப்பாலத்தில் அபாயகரமான பள்ளம்
களக்காடு,ஆக.2: களக்காடு கோட்டை விஸ்வகர்மா தெருவுக்கு செல்லும் சாலையில் தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள அபாயகரமான பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த பள்ளத்தால் விபத்து ஏற்படும் முன்பு நகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காடு கூலக்கடை பஜாரிலிருந்து கோட்டை விஸ்வகர்மா தெருவிற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த...