வரும் செப்.30ம் தேதி வரை சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் சமரச தீர்வு முகாம்
வீரவநல்லூர்,ஜூலை 31: சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் செப்.30ம் தேதி வரை சமரச தீர்வு முகாம் நடைபெறுகிறது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஏற்பாட்டின் பேரில் சேரன்மகாதேவி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிறப்பு சமரச தீர்வு முகாம் நடந்து வருகிறது. செப்.30 வரை...
ராதாபுரம் லெப்பைகுடியிருப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
பணகுடி, ஜூலை 30: ராதாபுரம் லெப்பை குடியிருப்பில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை சபாநாயகர் அப்பாவு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ராதாபுரம் தொகுதி லெப்பைகுடியிருப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமை சபாநாயகர் அப்பாவு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், உங்களுடன் ஸ்டாலின் என்னும்...
பெயிண்டர் மீது தாக்குதல்
களக்காடு, ஜூலை 30: திருக்குறுங்குடி அருகே வன்னியன்குடியிருப்பைச் சேர்ந்தவர் வள்ளிமுருகன் (38). பெயிண்டரான இவர் தளவாய்புரத்தில் உள்ள தனது சகோதரி நடத்தி வரும் ஓட்டலுக்கு நடந்து சென்றார். அப்போது, அங்கு நின்ற தளவாய்புரத்தை சேர்ந்த இசக்கிபாண்டியன் மகன் சுதர்சன் என்ற சுரேஷ், நம்பிதலைவன் பட்டயம் சிவபெருமாள் என்ற சிவா, இசக்கிமுத்து என்ற பாண்டி மகன் இசக்கிராஜா...
அரசு பஸ்-ஆம்புலன்ஸ் மோதல் நோயாளி பரிதாப சாவு
நாகர்கோவில், ஜூலை 30: வள்ளியூரை சேர்ந்தவர் பால்ராஜ் (75). உடல் நலம் பாதிக்கப்பட்ட பால்ராஜை நேற்று இரவு வள்ளியூரில் இருந்து நாகர்கோவிலில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். நாகர்கோவில் பால்பண்ணை அருகே வரும்போது சென்டர் மீடியனின் வலதுபுறம் ஆம்புலன்ஸ் முந்தி செல்ல முயன்றது. அப்போது களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்று...
சேரன்மகாதேவியில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி
வீரவநல்லூர்,ஜூலை 29: சேரன்மகாதேவியில் சுகாதாரத்துறை சார்பில் உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேரன்மகாதேவியில் சுகாதாரத்துறை, பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி முன்பு துவங்கிய பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று...
நாகர்கோவில் சிஇடி செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா
நெல்லை, ஜூலை 29: நாகர்கோவில் திடலில் உள்ள சி.இ.டி செவிலியர் கல்லுாரியின் 10-வது மற்றும் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்தார். துணை பேராசிரியர் அமலா ஸ்டெபி வரவேற்றார். நிறுவனத்தின் செயலாளர் ஷாகுல்ஹமீது, பொருளாளர் சாதிக் அலி மற்றும் நிர்வாக அறங்காவலர் முஹம்மது ஷா...
வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் கலைவாணி மெட்ரிக் பள்ளி சாதனை
திருவேங்கடம், ஜூலை 28: திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் சங்கரன்கோவில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாலிபால் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 6 அணிகள் முதலிடமும், எறிபந்து போட்டியில் ஆண்கள் மற்றும்...
ஏர்வாடி அருகே துணிகரம் கோயில் கணக்கர் வீட்டில் திருட்டு
ஏர்வாடி, ஜூலை 28: ஏர்வாடி அருகே கோயில் கணக்கர் வீட்டில் பித்தளை பானை, திருவிளக்குகள், குடங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஏர்வாடி அருகேயுள்ள புலியூர்குறிச்சி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பார்வதிநாதன். இவர் சாத்தான்குளத்தில் தங்கியிருந்து அங்குள்ள கோயிலில் கணக்கராக வேலை பார்த்து வருகிறார். இவரது...
குலவணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலம்
கேடிசி நகர், ஜூலை 28: தமிழ்நாட்டில் நெல்லை- திருச்செந்தூர் ரயில்வே பிரிவில் குலவணிகர்புரத்தில் ‘ஒய்’ வடிவ ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நெல்லை எம்.பி., ராபர்ட்புரூஸ் எம்பி பேசினார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் விதி எண்-377ன் கீழ் பேசியதாவது: நெல்லை- திருச்செந்தூர் ரயில்வே இருப்புப்...