ஏர்வாடி அருகே துணிகரம் கோயில் கணக்கர் வீட்டில் திருட்டு
ஏர்வாடி, ஜூலை 28: ஏர்வாடி அருகே கோயில் கணக்கர் வீட்டில் பித்தளை பானை, திருவிளக்குகள், குடங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஏர்வாடி அருகேயுள்ள புலியூர்குறிச்சி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பார்வதிநாதன். இவர் சாத்தான்குளத்தில் தங்கியிருந்து அங்குள்ள கோயிலில் கணக்கராக வேலை பார்த்து வருகிறார். இவரது...
குலவணிகர்புரத்தில் ரயில்வே மேம்பாலம்
கேடிசி நகர், ஜூலை 28: தமிழ்நாட்டில் நெல்லை- திருச்செந்தூர் ரயில்வே பிரிவில் குலவணிகர்புரத்தில் ‘ஒய்’ வடிவ ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நெல்லை எம்.பி., ராபர்ட்புரூஸ் எம்பி பேசினார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் விதி எண்-377ன் கீழ் பேசியதாவது: நெல்லை- திருச்செந்தூர் ரயில்வே இருப்புப்...
சங்கரன்கோவில் அருகே புத்தர் கோயிலில் உலக அமைதி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்
சங்கரன்கோவில், ஜூலை 28: சங்கரன்கோவில் வட்டம் வடக்கு புதூரில் அமைந்திருக்கும் வேல்ஸ் பப்ளிக் பள்ளியின் சார்பில் வீரிருப்பில் அமைந்துள்ள புத்தர் கோயிலில் பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்ற சுற்றுப்புறச்சூழல் மற்றும் உலக அமைதி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாணவ, மாணவிகள் கோயிலின் சுற்றுப்புறத்தை தூய்மை செய்தனர். கோயிலின் சுற்றுப்புறத்தில் மரக்கன்றுகளை...
குற்றாலத்தில் மலர் கண்காட்சி நிறைவு
தென்காசி, ஜூலை 26: குற்றாலத்தில் ஆறு நாட்களாக நடைபெற்ற மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. சுமார் 8000 பேர் பார்வையிட்டனர். குற்றாலம் சாரல் திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை எட்டு நாட்கள் நடைபெறுகிறது. சாரல் திருவிழாவில் ஒரு அங்கமாக ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் 20ம் தேதி துவங்கி...
கீழப்பாவூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பாவூர்சத்திரம், ஜூலை 26: கீழப்பாவூர் பேரூராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், பேரூராட்சி தலைவர் ராஜன் பங்கேற்றனர். கீழப்பாவூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தலைமை வகித்த பேரூராட்சி தலைவர் ராஜன் முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், செயல்...
குற்றாலத்தில் தொடரும் மழை மெயினருவியில் 7வது நாளாக குளிக்க தடை
தென்காசி, ஜூலை 26: குற்றாலத்தில் தொடரும் மழை காரணமாக 7வது நாளாக மெயின் அருவியில் தடை நீடிக்கிறது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் நான்காவது நாளாக நேற்றும் தடை நீடித்தது. குற்றாலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின்...
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம் வட்டார பகுதிகளில் தனிப்படை 24மணி நேர கண்காணிப்பு
ஆலங்குளம், ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆலங்குளம், காளத்திமடம், குருவன்கோட்டை, நல்லூர், மருதம்புத்தூர், புதுப்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 32 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காரையார் சொரிமுத்து அய்யனார், திருச்செந்தூர் முருகன் கோயில், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்களுக்கு குடும்பத்துடன் தரிசிக்க புறப்பட்டுச் சென்றனர். இவ்வாறு ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வெளியூர்...
நெல்லையில் ஜூலை 30ல் எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம்
நெல்லை,ஜூலை 25: நெல்லை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறை தீர் கூட்டம் ஜூலை 30ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து...
ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை, தென்காசி நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
நெல்லை, ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்ட நீர்நிலைகளில் திரளானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இறந்த முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபடுவது இந்துக்களின் ஐதீகம். அந்தவகையில் ஆடி அமாவாசை தினமான நேற்று நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில்...