அம்பையில் வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
அம்பை,ஜூன் 12: அம்பையில் வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்ட துணை இயக்குநர் இளையராஜா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் அம்பாசமுத்திரம், துணை இயக்குநர் அலுவலகக்...
நெல்லை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்
தியாகராஜநகர், ஜூன் 12: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு டிஎன் ஸ்கில் திட்டத்தின் கீழ் ஏ2000 சொல்யூசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 2 நாள் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 550 மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்தனர். 201 மாணவர்கள் நேரில் பங்கேற்று தங்களது தொழில் விருப்பங்களுக்கு ஏற்ப நேரடி தேர்வில் பங்கேற்றனர்....
பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
கேடிசி நகர், ஜூன் 11: கடையம் அருகே உள்ள கட்டேரிபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தப்பன் (52). மைக்செட் அமைக்கும் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் குமரி மாவட்டத்திற்கு மைக் செட் அமைக்கும் வேலைக்கு ஆனந்தப்பன் சென்றுள்ளார். அதன் பின்னர் நேற்று அங்கிருந்து பைக்கில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்....
வள்ளியூரில் நாளை மின்தடை
தியாகராஜநகர், ஜூன் 11: வள்ளியூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் செம்பாடூ மின் பாதையில் அவசர கால பணிகள் நாளை 12ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தெற்கு வள்ளியூர், வள்ளியம்மாள்புரம், மடப்புரம், முத்துராஜபுரம், கிழவனேரி ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை...
நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் ஜூன் 17ல் உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகைக்கான சிறப்பு முகாம்
நெல்லை,ஜூன்11: நெல்லை மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் ஜூன் 17ம் தேதி 8 தாலுகாக்களில் நடைபெற உள்ளதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; நெல்லை மாவட்டத்தில் உள்ள உழவர் பாதுகாப்புத்திட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், அவர்தம் சார்பு உறுப்பினர்களின் திருமண உதவித்தொகை, 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான கல்லூரி...
அங்கன்வாடி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
பாவூர்சத்திரம், ஜூன் 7: முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த தினத்தையொட்டி கீழப்பாவூர் மாதாங்கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடியில் இருக்கைகள், குக்கர், பாய் உள்ளிட்ட உபகரணங்களை கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாமணி, துணை செயலாளர் முருகன், முன்னாள் பேரூர் செயலாளர் ராமசாமி,...
பணகுடியில் நீதிமன்றத்தில் ஆஜராகாதவர் கைது
நெல்லை, ஜூன் 7: பணகுடியில் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருப்பணி புத்தன்தருவையைச் சேர்ந்தவர் ஞானசிங் (52). இவரை கடந்த 2012ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் பணகுடி போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர்...
கடையம் அருகே பேரன் திருமணத்திற்கு அழைக்காததால் மனமுடைந்த தாத்தா தற்கொலை
கடையம், ஜூன் 7: கடையம் அருகே பேரன் திருமணத்திற்கு அழைக்காததால் மனமுடைந்த தாத்தா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மைலப்புரத்தை அடுத்த சின்னக்குமார்பட்டி கீழத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(87). இவர் கடந்த 4ம்தேதி திடீரென விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை...
மானூர் அருகே கள் விற்றவர் கைது
மானூர்,ஜூன் 6: மானூர் அருகே சட்ட விரோதமாக கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர். நெல்ைல மாவட்டம் மானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எட்டாங்குளம் ஊருக்கு அருகில் சட்ட விரோதமாக கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்குள்ள...