வாசுதேவநல்லூர் பகுதியில் மது விற்ற 3 பேர் கைது
சிவகிரி, ஜூன் 18: வாசுதேவநல்லூர் பகுதியில் மது விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 90 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்யப்பட்டது. வாசுதேவநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் வாசுதேவநல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருளாச்சி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கருப்பன் மகன் சுப்புராஜ்(45) வீட்டில் மது...
விகேபுரத்தில் நகர இளைஞரணி ஆலோசனை கூட்டம்
விகேபுரம், ஜூன் 18: விகேபுரத்தில் நகர இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரவீந்தர் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆகாஷ், நகரச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி அமைப்பாளரும் நகராட்சி தலைவருமான செல்வ சுரேஷ் பெருமாள் வரவேற்றார். கூட்டத்தில் இளைஞரணி சார்பில்...
முதியவரை கல்லால் தாக்கியவர் கைது
வீரவநல்லூர், ஜூன்18: வீரவநல்லூர் யாதவர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாதுரை (62). இவரை அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் இசக்கிபாண்டி (26) என்பவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் கல்லால் தாக்கினாராம். இதில் காயமடைந்த அய்யாதுரை பின்னர் இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த வீரவநல்லூர் போலீசார், கல்லால் தாக்கிய இசக்கிபாண்டியை கைது...
புளியங்குடி அருகே பைக் மீது கார் மோதி சிறுவன் சாவு
கேடிசிநகர், ஜூன் 17: தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள அரியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் மதன் (17). இவன் சம்பவத்தன்று சிந்தாமணி பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மதனை அக்கம்...
நெல்லையில் ஜூன் 20ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நெல்லை, ஜூன் 17: நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 20ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் சுகுமார் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் ஜுன் 2025ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 20ம் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள...
சிவகிரியில் பொது விநியோக திட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
சிவகிரி,ஜூன் 17: சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் ஆர்டிஒ கவிதா தலைமை வகித்தார். குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் ராணி, தாசில்தார்ஆதிநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மைதீன்பட்டாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பகுதி அலுவலர் செந்தமிழ்ச்செல்வன்,...
பேட்டையில் 83 மூடை ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்
பேட்டை,ஜூன் 16: நெல்லை அருகே பேட்டையில் ரேஷன் அரிசி வெளிமார்க்கெட்டில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக நெல்லை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணபாண்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் பேட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். இதில் பேட்டை ரகுமான்பேட்டையை சேர்ந்த திலீப் (25) என்பவரை பிடித்து நடத்திய...
திருமணமான 10 மாதத்தில்புதுப்பெண் விஷம்
குடித்து தற்கொலை நெல்லை,ஜூன் 16: கோவை மாவட்டம் கருமத்தம்பாளையம் குமரன்நகரைச் சேர்ந்த பலவேசம் மகள் கிருத்திகா (21). இவருக்கும் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள வைராவிகுளம் நாராயணசாமி கோயில் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவருக்கும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இருவரும் கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவருக்கொருவர்...
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வு; நெல்லையில் 5 ஆயிரத்து 547 பேர் எழுதினர்
நெல்லை, ஜூன் 16: தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. நெல்லையில் 5 ஆயிரத்து 547 பேர் குரூப்-1 தேர்வை எழுதினர். 2023 பேர் தேர்வு எழுத வரவில்லை. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 70 இடங்களுக்கும், 2 உதவி வனப் பாதுகாவலர் பணிக்கும் பொதுவான குரூப்-1 மற்றும் குரூப்-1...