களக்காடு அருகே அரசு பஸ் வசதியின்றி கிராம மக்கள் தவிப்பு

களக்காடு, நவ. 28: களக்காடு அருகே தெற்கு அப்பர்குளம், வடக்கு அப்பர்குளம், நடுவக்குளம், புதுக்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு களக்காட்டிற்கு தான் வந்து செல்கின்றனர். இதுபோல இங்குள்ள மாணவ- மாணவியரும் களக்காடு மற்றும் நெல்லையில் உள்ள கல்வி...

ஆலங்குளம் அருகே பெய்த மழையில் மூதாட்டி வீடு இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

By Karthik Yash
27 Nov 2025

ஆலங்குளம், நவ.28: ஆலங்குளம் அருகே பெய்த மழையில் மூதாட்டி வீடு இடிந்து விழுந்தது. ஆலங்குளம் அருகே குருவன் கோட்டை எமராஜன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மனைவி லீலா (72). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து...

நெல்லை அருகே விசைப்படகு மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் மீனவருக்கு பலத்த தீக்காயம்

By Karthik Yash
27 Nov 2025

கூடங்குளம், நவ.28: நெல்லைஅருகே விசைப்படகு மீது வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் மீனவர் பலத்த தீக்காயம் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து தருவைக்குளம் துறைமுகம் நோக்கி நெல்லை மாவட்ட கடல் பகுதி வழியாக விசைப்படகுகளில் வந்து கொண்டிருந்தனர். இவ்வாறு கடல் வழியாக வரும் வழியில் சவேரியார்புரத்தைச்...

கல்லிடைக்குறிச்சியில் தெருவில் விளையாடிய 3 சிறுமிகள் உள்பட 7 பேரை கடித்து குதறிய நாய்

By Karthik Yash
26 Nov 2025

அம்பை,நவ.27: கல்லிடைக்குறிச்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாய்கள் நடமாடி வருகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் ஒரே நாளில் 3 வயது சிறுவன் உள்பட 12 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியது....

வள்ளியூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி உறுப்பினர் பதவியேற்பு

By Karthik Yash
26 Nov 2025

வள்ளியூர், நவ.27: வள்ளியூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சுப்புலட்சுமி பதவியேற்பு விழா நடந்தது. செயல் அலுவலர் சுப்பிரமணியன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் பேரூராட்சி தலைவர் ராதா. ராதாகிருஷ்ணன், துணை தலைவர் கண்ணன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ...

பணகுடி பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி போராட்டம் பாஜ நிர்வாகிகள் உள்பட 25 பேர் மீது வழக்கு

By Karthik Yash
26 Nov 2025

பணகுடி,நவ.27: பணகுடி பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ நிர்வாகிகள் உள்பட 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பணகுடி அருகே வடக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் கன்னியாகுமரி, பணகுடி, வள்ளியூர் பகுதியை சேர்ந்த சிலரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களை பெற்று...

மணிமுத்தாறு பேரூராட்சி கூட்டம்

By Karthik Yash
25 Nov 2025

அம்பை,நவ.26: மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற அவசர கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சித்தார்த் சிவா தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரமா தேவி, துணை தலைவர் பண்டாரம், சுகாதார அலுவலர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் கோட்டி முத்து, செல்வக்குமார், முப்பிடாதி, தமிழரசி, பிரேமா, மோகன் ராஜா, பாமா...

தினகரன் அறிவொளி திட்டம் காரியாண்டி அரசு பள்ளியில் வினா விடைதொகுப்பு வழங்கல்

By Karthik Yash
25 Nov 2025

தியாகராஜநகர்,நவ.26: தினகரன் நாளிதழ் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வினா- விடை தொகுப்பு வெளியிடப்படுகிறது. அனுபவமிக்க ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட இந்த வினா- விடை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வெளிவருகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான வினா-விடை தொகுப்பினை தினகரன் அறிவொளி திட்டத்தின் காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி...

களக்காட்டில் இளம்பெண் மாயம்

By Karthik Yash
25 Nov 2025

களக்காடு, நவ. 26: களக்காட்டில் பட்டதாரி இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். களக்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் (55). இவரது மகள் சுபாஷினி (22). இவர், நெல்லையில் உள்ள கல்லூரியில் எம்எஸ்சி படித்து விட்டு கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்து வந்தார். கடந்த 21ம் தேதி மாலை இவர் கம்ப்யூட்டர் சென்டருக்கு...

திருவழுதிநாடார்விளை திமுக நிர்வாகி குடும்பத்திற்கு நிதியுதவி

By Karthik Yash
24 Nov 2025

ஏரல், நவ. 25: ஏரல் அருகேயுள்ள திருவழுதிநாடார்விளை முன்னாள் திமுக வார்டு செயலாளர் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். இதுகுறித்து கேள்விப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்த தொகையை ஏரல் பேரூர் செயலாளர்...