ஆட்டோ கவிழ்ந்து 4 மாணவர்கள் படுகாயம் எம்எல்ஏ நலம் விசாரித்தார் தண்டராம்பட்டு அருகே சாலையோர பள்ளத்தில்

தண்டராம்பட்டு, ஜூலை 10: தண்டராம்பட்டு அருகே சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர்செக்கடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பள்ளி மாணவர்கள் மருதேஷ்(14), ரூபி(14), பரத்(16), விஷால்(15). இவர்கள் 4 பேரும் நேற்று மதியம் தானிப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை எழுதுவதற்காக...

விழா முன்னேற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டார் 12ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை

By Karthik Yash
09 Jul 2025

திருவண்ணாமலை, ஜூலை 10: திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் துணை முதல்வர் வருகைக்காக மேற்கொள்ளப்படும் விழா முன்னேற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 12ம் தேதி வருகிறார். மாவட்ட எல்லையில் துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று...

387 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தகவல் கையேடுகள் வழங்க 1500 தன்னார்வலர்கள் நியமனம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி முதல்

By Karthik Yash
08 Jul 2025

திருவண்ணாமலை, ஜூலை 9: திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வரும் 15ம் தேதி முதல் 387 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து நகர பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மொத்தம்...

கலைஞர் வெண்கல சிலை திறப்பு விழா ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செங்கத்தில் 13ம் தேதி துணை முதல்வர் திறக்க உள்ள

By Karthik Yash
08 Jul 2025

செங்கம், ஜூலை 9: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மில்லத்நகர் ஜங்ஷன் சாலையில் உள்ள ரவுண்டானா சந்திப்பில் 12 அடியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வெண்கல சிலை புதியதாக நிறுவப்பட்டது. இதற்கான திறப்பு விழா வரும் 13ம் தேதி நடக்கிறது. சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலைஞர் வெண்கல சிலையை திறந்து வைக்க...

மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு கணவன் 2வது திருமணத்தால் விரக்தி

By Karthik Yash
08 Jul 2025

திருவண்ணாமலை, ஜூலை 9: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கலசபாக்கம் தாலுகா படிஅகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு மனைவி சிவகங்கா(40). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக நேற்று சிவகங்கா வந்திருந்தார். அப்போது, திடீரென பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து கொண்டு...

பட்டாசு வெடித்ததில் தொழிலாளி பலி இறுதி ஊர்வலத்தில்

By Karthik Yash
07 Jul 2025

திருவண்ணாமலை, ஜூலை 8: வேட்டவலம் அருகே நடந்த இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த கலந்தல்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் சசிகுமார்(37), கூலித்தொழிலாளி. இவர், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த திருவானைமுகம் கிராமத்தில் விபத்தில் இறந்த உறவினரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக...

58 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை ஆர்டிஓ உத்தரவு மக்கள் குறைதீர்வு கூட்டம்

By Karthik Yash
07 Jul 2025

ஆரணி, ஜூலை 8: மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் ெபறப்பட்ட 58 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார். ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று ஆர்டிஓ சிவா தலைமையில் நடந்தது. இதில், வருவாய் மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ஆர்டிஓ சிவா...

ரூ.1.33 கோடியில் மடம், தேர் கொட்டகை அமைக்கும் பணி பூமி பூஜையிட்டு எம்பி தொடங்கி வைத்தார் தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில்

By Karthik Yash
07 Jul 2025

சேத்துப்பட்டு, ஜூலை 8: ேதவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில் ரூ.1.33 கோடியில் புதிய மடம், தேர் கொட்டகை அமைக்கும் பணியை எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில் திருத்தேர் மற்றும் அம்மன் தேர் நிறுத்த புதிய கொட்டகை அமைப்பதற்கும், கோயில் எதிரே உள்ள சுந்தரமூர்த்தி மடத்தில்...

அண்ணாமலையார் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்; முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

By MuthuKumar
06 Jul 2025

திருவண்ணாமலை, ஜூலை 7: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வார இறுதி விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா...

காதல் திருமணமான 7 மாதத்தில் மைனர் பெண் விஷம் குடித்து தற்கொலை; போலீசார் விசாரணை

By MuthuKumar
06 Jul 2025

சேத்துப்பட்டு: போளூரில் காதல் திருமணம் செய்த 7 மாதங்களில் மைனர் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ(21), கூலித்தொழிலாளி. இவர் போளூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை காதலித்து 7 மாதங்களுக்கு...