மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் உத்திர காவேரி ஆற்றில்
ஒடுகத்தூர், ஆக.6: ஒடுகத்தூர் பகுதிகளில் உள்ள உத்திரிக்காவேரி ஆற்றில் இரவும், பகலும் மணல் கடத்தல் நடந்து வருவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் உத்திரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சேர்பாடி, கெங்கசாணி குப்பம், கொட்டாவூர், கத்தாரிகுப்பம், மடையாப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செல்லும்...
வீட்டு மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய போர்மென் சஸ்பெண்ட் மின்வாரிய அதிகாரிகள் தகவல் வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில்
வேலூர், ஆக. 6: வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் வீட்டு மின்இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய போர்மென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த செதுவாலை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தனியார் மருத்துவமனை டிரைவரான இருசப்பன்(67), அதேபகுதியில் புதிதாக கட்டும் வீட்டிற்கு மின்இணைப்பு கேட்டு விரிஞ்சிபுரம் மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மேலும் வீட்டின்...
சாலையில் குப்பைகளை கொட்டிய வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் ஆரணியில் அதிகாரிகள் அதிரடி
ஆரணி, ஆக.5: ஆரணி நகராட்சியில் சாலையில் குப்பைகளை கொட்டிய வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் நாள்தோறும் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை உடனுக்குடன் சேகரித்து தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில்...
இந்திர விமான வாகனத்துக்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தம் அண்ணாமலையார் கோயில்
திருவண்ணாமலை, ஆக.5: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சுவாமி வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் இந்திர விமான வாகனத்திற்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் நாட்களில் சுவாமி வீதி உலாவுக்கு பயன்படுத்தும் வாகனங்களில் முக்கியமானது இந்திர விமான வாகனம். இந்த வாகனத்துக்கு மரச்சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. திறந்து பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டதால்...
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
திருவண்ணாமலை, ஆக.5: திருவண்ணாமலை அடுத்த தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி செல்வி(42). திருவண்ணாமலையில் உள்ள ஒரு பாத்திர கடையில் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கமபோல வேலையை முடித்துவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். திருவண்ணாமலை- மணலூர்பேட்டை சாலையில் கண்ணமடை காட்டுப்பகுதி அருகே பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 வாலிபர்கள், செல்வி...
தென்பெண்ணை ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செங்கம் அருகே ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
செங்கம், ஆக.4: செங்கம் அருகே ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நீப்பத்துறையில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் மற்றும் சென்னியம்மன் பாறையில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று ஆடிப்பெருக்கு...
4 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் போக்சோவில் பெயிண்டர் கைது ஆரணி அருகே விளையாடிக் கொண்டிருந்த
ஆரணி, ஆக.4: ஆரணி அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த பெயிண்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண். குடும்ப தகராறு காரணமாக கணவனை பிரிந்து, 4 வயது பெண் குழந்தையுடன் தனது தாய்...
டிராக்டர் கவிழ்ந்து கணவன், மனைவி பலி மற்றொரு பெண் படுகாயம் ஜமுனாமரத்தூர் அருகே சோகம்
கலசப்பாக்கம், ஆக.4: ஜமுனாமரத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் கணவன், மனைவி பரிதாபமாக பலியாகினர். மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் ஒன்றியம், பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்(40). இவரது மனைவி பரிமளா(35). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று கணவன், மனைவி இருவரும் வெளியே சென்று விட்டு...
செய்யாறு அருகே கல்குவாரி மேலாளர் மீது தாக்குதல்: கிராம மக்கள் மீது வழக்கு
செய்யாறு, ஆக. 3: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் சந்தோஷ்குமார்(29) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், கடந்த சில நாட்களுக்கு முன் சந்தோஷ்குமாரிடம் சென்று, திருவிழா நடத்துவதற்காக சில லட்சங்கள் மற்றும் ஒட்டுமொத்த கிராமத்திற்கு பயன்பெறும் வகையில்...