மான் கறி சமைத்த 3 பேருக்கு அபராதம் வனத்துறை நடவடிக்கை தண்டராம்பட்டு அருகே
தண்டராம்பட்டு, ஜூன் 30: தண்டராம்பட்டு அருகே மான் கறி சமைத்த 3 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர். தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் தண்ணீர்பந்தல் பகுதியில் சிலர் மானை வேட்டையாடி சமைத்து கொண்டு இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சாத்தனூர் அணை...
அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு சிலர் கீழே விழுந்ததால் பரபரப்பு விடுமுறையில் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை, ஜூன் 30: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலர் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சமீப காலமாக, நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக அலைமோதுகிறது. குறிப்பாக, வார இறுதி விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவண்ணாமலை நகரம்...
காதல் திருமணம் செய்த அக்கா தற்கொலை
செய்யாறு, ஜூன் 27: செய்யாறு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட அக்கா தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரத்தில் இருந்த வாலிபர், அக்காவின் கணவரை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஆராத்திரி வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி(58), கைத்தறி நெசவுத்தொழிலாளி. இவரது மகன் தணிகைவேல்(35). இவர் அதே கிராமத்தை சேர்ந்த...
10.18 லட்சத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மொபட் எம்பி, எம்எல்ஏ வழங்கினர்
வந்தவாசி, ஜூன் 27: வந்தவாசியில் நடந்த சிறப்பு முகாமில் ரூ.10.18 லட்சம் மதிப்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மொபட்டை எம்பி, எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். வந்தவாசி வட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாற்றுத்திறனாளிகள் மாவட்ட...
ராணுவ தளவாடம் அமைக்க அதிகாரிகள் ஹெலிகாப்டரில் ஆய்வு தண்டராம்பட்டு எடத்தனூர்-திருவடத்தனூர் பகுதியில்
தண்டராம்பட்டு, ஜூன் 27: தண்டராம்பட்டு எடத்தனூர்-திருவடத்தனூர் பகுதியில் ராணுவ தளவாடம் அமைக்க அதிகாரிகள் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த திருவடத்தனூர் எடத்தனூர் பகுதியில் நேற்று காலை 9.40 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் 2 ஹெலிகாப்டர்கள் பறந்தது. எடத்தனூர் கிராமத்தில் 100 அடி உயரத்தில் மூன்று சுற்றுகள் சுற்றி வந்து...
வரும் 30ம் தேதி வரை அவகாசம்; மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்கள்: மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை, ஜூன் 25: திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவைபுரிபவர்களை ஊக்கப்படுத்த ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று மாநில அளவில் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுகள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும்...
புதுப்பாளையம் மேற்கு ஒன்றியம், பேரூர் திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்
செங்கம், ஜூன் 25: புதுப்பாளையம் மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக சார்பில் திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. தலைமைச் செயற்குழு உறுப்பினரும் கலசபாக்கம் எம்எல்ஏவுமான பெ.சு.தி சரவணன் தலைமை தாங்கினார். தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செந்தமிழ்செல்வன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஒன்றிய...
செய்யாறு அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து 14 சவரன் திருட்டு
செய்யாறு, ஜூன் 25: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வன்(48), சாலை பணியாளர். இவரது மனைவி சசிகலா. இவருக்கு உதயகுமார் என்ற மகனும் கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் குடும்பத்தோடு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார்...
திருவண்ணாமலை தேரோடும் மாட வீதியில் விமான ஓடுதளம் அமைக்கும் தொழில்நுட்பத்தில் கான்கிரீட் சாலை அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு
திருவண்ணாமலை, ஜூன் 24: திருவண்ணாமலை மாட வீதியில், விமான ஓடுதளம் அமைக்கும் தொழில்நுட்பத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது. இப்பணியை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், தென்னகத்தின் புகழ்மிக்க சைவத் திருத்தலமாகும். இத்திருக்கோயிலை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான...