பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஆரணி, ஜூலை 4: ஆரணி டவுன் மையப்பகுதியில் உள்ள சூரிய குளத்தை தூர்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி இந்து முன்னணியினர் மற்றும் பஜாகவினர் உட்பட 60 க்கும் மேற்பட்டோர் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது, மனு அளிக்காமல் கூட்டமாக நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த ஏடிஎஸ்பி...
ரூ.2.18 லட்சம் உண்டியல் காணிக்கை செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில்
செங்கம், ஜூலை 4: செங்கம் நகரில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் கடந்த மே மாதம் 9ம் தேதி திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து 48ம் நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேன்மொழி, ஆய்வாளர் சத்யா மற்றும் இந்து...
ஓரணியில் தமிழ்நாடு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை எம்எல்ஏ தொடங்கி வைத்தார் தானிப்பாடி கிராமத்தில்
தண்டராம்பட்டு, ஜூலை 4: செங்கம் தொகுதி தண்டராம்பட்டு மத்திய ஒன்றியத்துக்குட்பட்ட தண்டராம்பட்டு, மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தானிப்பாடி கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி தொடங்கி வைத்தார். அப்போது ஒன்றிய கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் எல்ஐசி வேலு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி...
ஆனி திருமஞ்சன விழா கோலாகலம் அலங்கார ரூபத்தில் நடராஜர் வீதியுலா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்
திருவண்ணாமலை, ஜூலை 3: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா விமரிைசயாக நடந்தது. அதையொட்டி, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி சமேத நடராஜர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் ஆனி திருமஞ்சனம் நடராஜருக்கான சிறப்புமிக்க வழிபாடாகும். மார்கழி திருவாதிரையில் அருேணாதயகால பூஜை,...
தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய ராணுவ வீரர் கண்ணமங்கலத்தில் பணி நிறைவு வரவேற்பு விழா
கண்ணமங்கலம், ஜூலை 3: கண்ணமங்கலத்தில் நடந்த பணி நிறைவு வரவேற்பு விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு ராணுவவீரர் பரிசுகள் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பிள்ளையார் கோயில் வளாகத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற ராணுவ வீரர் பாலகிருஷ்ணனுக்கு வரவேற்பு விழா நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் பரத் தலைமை தாங்கினார். முன்னாள் ராணுவ அதிகாரிகள் கார்த்திகேயன்,...
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு விரைந்து முடிக்க உத்தரவு துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில்
திருவண்ணாமலை, ஜூலை 3: துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் நடைபெறும் அரசு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில், பல்வேறு அரசு துறைகளில் சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளிவாகை ஊராட்சியில் 2024- 25ம் நிதியாண்டின்...
ரூ.1.28 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார் திருவண்ணாமலை அருகே அரசு பள்ளியில்
திருவண்ணாமலை, ஜூலை 2: திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், ரூ.1.28 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை ஒன்றியம், காட்டாம்பூண்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ1.28 கோடியில் புதியதாக 6 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. தரை தளம் மற்றும் முதல் தளம்...
தலைமுடியில் இருந்து உயிரி உரம் தயாரித்து மாநில அளவில் சாதனை செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
செய்யாறு, ஜூலை 2: செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தலை முடியில் இருந்து உரம் தயாரித்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையும், தமிழ்நாடு தொழில் முதலிட்டு கழகமும் இணைந்து பள்ளி மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் எஸ்ஐடிபி 3.0. பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில்...
தொழிலாளி மீது சரமாரி தாக்குதல் 2 வாலிபர்கள் கைது ஆரணி அருகே
ஆரணி, ஜூலை 2: கண்ணமங்கலம் அடுத்த புதுப்பாளையம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பரமகுரு(34), இவர், ஆரணி அடுத்த சேவூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். கடந்த 27ம் தேதி பரமகுரு வழக்கம்போல், வேலைக்கு வந்து பங்கில் வேலைசெய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, சேவூர் பகுதியை சேர்ந்த ஆகாஸ்(22) மற்றும் அவரது நண்பர்...