செய்யாறில் வருவாய் துறை சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
செய்யாறு: செய்யாறில் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள சிறப்பு முகாம் வருவாய் துறை மூலமாக போலீசார் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு முகாமை கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் கூட்டாக நேற்று மதியம் ஆய்வு செய்து பணிகளை முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு வருவாய்த்துறையினருக்கு ஆலோசனைகள் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டாட்சியர்...
முகத்தில் துணியை மூடி மூதாட்டியிடம் நகையை திருட முயன்ற பெயிண்டர் கைது
செய்யாறு: முகத்தில் துணியை மூடி மூதாட்டியிடம் நகையை திருட முயன்ற பெயிண்டரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா பல்லாவரம் நத்த கொலை கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல், மனைவி சரோஜா(80). இவர் குரங்கணில் முட்டம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று முன்தினம் மாலை...
திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் மாதந்தோறும் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா: அமைச்சர் எ.வ.வேலு நாளை தொடங்கி வைக்கிறார்
திருவண்ணாமலை: தூய்மை அருணை அமைப்பு சார்பில், தூய்மைப்பணி மரம் நடுதல், நீர் நிலை பராமரித்தலோடும், மாதந்தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடக்கிறது. திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை திட்டம் செயல்பட்டு வருகிறது. தூய்மை அருணை...
செங்கத்தில் கலைஞர் வெண்கல முழுஉருவச்சிலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
செங்கம், ஜூலை 14: திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், செங்கம் நகராட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு விழா மற்றும் 60 அடி உயர கம்பத்தில் திமுக கொடியேற்று விழா நேற்று மாலை நடந்தது. மாவட்ட செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, எம்பி சி.என்.அண்ணாதுரை,...
மின்சாரம் தாக்கி 6ம் வகுப்பு மாணவி பலி உறவினர்கள் திடீர் மறியல்
செங்கம், ஜூலை 14: செங்கம் அருகே மின்சாரம் தாக்கி 6ம் வகுப்பு மாணவி பரிதாபமாக பலியானார். அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கம் அடுத்த புதிய குயிலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் யுவஸ்ரீ(11). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை...
பீர் பாட்டிலால் தாக்கி பணம் பறிக்க முயற்சி டாஸ்மாக் சேல்ஸ்மேன், பெண் உட்பட 3 பேர் படுகாயம் ஆரணி அருகே பரபரப்பு
ஆரணி, ஜூலை 11: ஆரணி அடுத்த தேவிகாபுரம் கிராமம் தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்(48), இவர் ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், முருகன் வழக்கம் போல் நேற்று டாஸ்மாக் கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இரவு டாஸ்மாக் கடையில் மது விற்பனை கணக்குகளை முடித்துக் கொண்டு...
திருவண்ணாமலை - நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் திருப்பதி, காளஹஸ்தி செல்லும் பக்தர்களுக்கும் பயன் ஆந்திர மாநில பக்தர்களின் வசதிக்காக
திருவண்ணாமலை, ஜூலை 11: திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை நேற்று தொடங்கியது. அதன்மூலம், திருவண்ணாமலைக்கு வரும் ஆந்திர மாநில பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தென்னகத்தின் புகழ்மிக்க சைவத்திருத்தலமாகும். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழும் அண்ணாமலையார் கோயிலை தரிசிக்க சமீப காலமாக...
தொழிலாளிக்கு கத்தி குத்து வாலிபர் கைது ஆரணி அருகே
ஆரணி, ஜூலை 11: ஆரணி டவுன் புதுகாமூர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(42), இவர், ராட்டிணமங்கலம் மார்டன் ரைஸ்மில் வைத்து நடத்தி வருகிறார். இவரது ரைஸ்மில்லில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளிகள், ரைஸ்மில் பின்புரம் உள்ள அறையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், அருண்குமார் வழக்கம்போல், ரைஸ்மில்லுக்கு வந்து வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்....
வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு திருவண்ணாமலை மாநகராட்சியில்
திருவண்ணாமலை, ஜூலை 10: திருவண்ணாமலை மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். நூற்றாண்டு பெருமை கண்ட திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து, திருவண்ணாமலை மாநகராட்சிக்கான வளர்ச்சி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மாநகரின் முக்கிய சாலைகளை தரம் உயர்த்துதல்,...