வந்தவாசி அருகே அடுத்தடுத்து துணிகரம்; கட்டிட மேஸ்திரி உள்பட 2 வீடுகளில் 10 சவரன் நகை, பணம் திருட்டு: தடயங்கள் சேகரித்து போலீசார் விசாரணை
வந்தவாசி, ஜூலை 19: வந்தவாசி அருகே கட்டிட மேஸ்திரி உள்பட 2 வீடுகளில் 10 சவரன் நகை, ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழையூர் சாலம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி முனியம்மாள்(45). இவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் நேற்றுமுன்தினம் இரவு திருவண்ணாமலை கோயிலுக்கு...
தமிழின் தொன்மையான எழுத்துக்கள் கொண்ட கி.பி.4ம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு
திருவண்ணாமலை, ஜூலை 18: தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் பகுதியில் தமிழின் தொன்மையான எழுத்துக்கள் கொண்ட கி.பி.4ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, சாத்தனூர் அடுத்த மல்லிகாபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நடுகல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன், பழனிச்சாமி,...
கலசபாக்கம் அருகே பர்வத மலை மீது ஏறிய பெங்களூரு கல்லூரி மாணவன் மூச்சுத்திணறி பலி
கலசபாக்கம்: பர்வதமலை கோயிலில் தரிசனம் செய்து திரும்பிய பெங்களூரு கல்லூரி மாணவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார். கர்நாடக மாநிலம், பெங்களூரு அடுத்த பெல்லாரி தேவி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் மனோஜ்குமார்(21). பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே...
அண்ணாமலையார் கோயிலில் ரூ.200 கோடியில் பெருந்திட்ட வரைவு
* பிரேக் தரிசனம் அறிமுகம்; தரிசன கட்டணம் உயர்வு * அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி திருவண்ணாமலை, ஜூலை 18: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.200 கோடியில் பெருந்திட்ட வரைவுக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள்...
அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரமோற்சவம் நிறைவு; ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை
திருவண்ணாமலை, ஜூலை 17: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி பிரமோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது. அதையொட்டி, ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில், ஆனி பிரமோற்சவ விழா மிகவும் சிறப்புக்குரியது. அதன்படி, தட்சணாயண புண்ணியகாலம் என அழைக்கப்படும் ஆனி பிரமோற்சவ விழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது....
குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி: கலசப்பாக்கம் அருகே சோகம்
கலசப்பாக்கம், ஜூலை 17: கலசப்பாக்கம் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தேவனாம்பட்டு ஊராட்சி, காட்டுப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. விவசாயி. இவரது மனைவி பார்கவி. இவர்களது 2 வயது ஆண் குழந்தை முகிலன். நேற்று...
கீழ்பென்னாத்தூர் அருகே குடும்ப தகராறில் எலக்ட்ரீஷியன் தீக்குளித்து தற்கொலை: போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர், ஜூலை 17: கீழ்பென்னாத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக எலக்ட்ரீஷியன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கிருஷ்ணாபுரம் வஉசி தெருவை சேர்ந்தவர் தேவநாதன் மகன் ராஜரங்கன்(36), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி வெண்ணிலா(30). இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை....
குளம் தூர் வருவதாக கூறி முரம்பு மண் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்: 2 பேர் கைது
ஆரணி, ஜூலை 16: ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள புங்கம்பாடி கிராமத்தில் குளத்தை தூர்வருவதாக கூறி முரம்பு மண் கடத்தி விற்பனை செய்வதாக ஆரணி ஆர்டிஓவுக்கு தகவல் கிடைத்தது. ஆர்டிஓ சிவா தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் புங்கம்பாடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள குளத்தில் உரிய...
பெரணமல்லூர் அருகே அரசு பள்ளியில் ஸ்மார்ட் போர்ட் வகுப்பறை தொடக்கம்
பெரணமல்லூர், ஜூலை 16: பெரணமல்லூர் அடுத்த அல்லியந்தல் பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாலவன் தலைமை தாங்கினார். கணித ஆசிரியர் இளையராஜா வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் செயல்படும் குவாரி மூலமாக கனிம...