செங்கம் சந்தையில் ஆடி மாதம் என்பதால் ரூ.10 லட்சத்திற்கு வர்த்தகம்: ஆடு, கோழி விற்பனை அதிகரிப்பு

செங்கம், ஜூலை 22: ஆடி மாதம் என்பதால் செங்கத்தில் நடந்த சந்தையில் ஆடு, கோழிகள் சுமார் ரூ.10 லட்சத்திற்கு விற்பனையானது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ஆடு மற்றும் கோழி விற்பனை சந்தை நடைபெறும். இந்த சந்தையில் செங்கம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள், நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் ஆடு மற்றும் கோழிகளை விற்பனை செய்வார்கள்....

செங்கம் நகரில் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றி சிவன் கோயிலின் பதினாறு கால் கல் மண்டபம் புனரமைப்பு: அறங்காவலர் குழுவினர் அதிரடி நடவடிக்கை

By MuthuKumar
21 Jul 2025

செங்கம், ஜூலை 22: செங்கம் நகரில் அனுபாம்பிகை சமேத ரிஷபேஷ்வரர் கோயில் மத்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் கட்டிய காலம் முதல் இதுநாள் வரையில் திருப்பணி முடித்து கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. செங்கம் நகர ஆன்மீக பொதுமக்கள், விழா குழுவினர், உபயதாரர்கள் எம்எல்ஏ மு.பெ.கிரியிடம் கோயில் திருப்பணி...

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு வாராந்திர குறைதீர்வு கூட்டத்தில்

By MuthuKumar
21 Jul 2025

திருவண்ணாமலை, ஜூலை 22: வாராந்திர குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில் டிஆர்ஓ ராம்பிரதீபன், ஆர்டிஓ ராஜ்குமார், சப்-கலெக்டர் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமார் உள்ளிட்ட பலர்...

பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்: ஆடி கிருத்திகை விழா

By MuthuKumar
20 Jul 2025

பெரணமல்லூர், ஜூலை 21: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று ஆடி கிருத்திகை பெருவிழா சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதன்படி, பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் கிராமம், தீர்க்காஜல ஈஸ்வரர் கோயிலில் வள்ளி தெய்வானை...

தண்டராம்பட்டு அருகே மான் கறி சமைத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

By MuthuKumar
20 Jul 2025

தண்டராம்பட்டு தண்டராம்பட்டு அருகே மான் கறியை வாங்கி சமைத்தவருக்கு வனத்துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். சாத்தனூர் வனப்பகுதியில் மானை வேட்டையாடி இறைச்சி விற்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் சுதாகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சாத்தனூர் வன அலுவலர் ரவி, வனவர் குமார் தலைமையில் வனத்துறையினர் குப்பந்தாங்கல் உச்சிமலை குப்பம்...

அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

By MuthuKumar
20 Jul 2025

4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் ஆடிப்பூரம் உற்சவத்தையொட்டி அம்மன் வீதியுலா திருவண்ணாமலை, ஜூலை 21: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வெளி பிரகாரம் வரை ஒரு கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தி தரும் திருத்தலமாகவும் திகழ்கிறது திருவண்ணாமலை...

விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 வாலிபர்கள் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் வனப்பகுதிக்குள் காரில் சென்று

By Karthik Yash
19 Jul 2025

திருவண்ணாமலை, ஜூலை 20: திருவண்ணாமலை அருகே காப்புக்காடு பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை அடுத்த கவுத்திமலை காப்புக்காடு பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் சுதாகருக்கு கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை...

கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1910 கோடி வங்கிக் கடனுதவி 29,620 குழுக்கள் நேரடி பயன்: சுயதொழில் வாய்ப்புகள் அதிகரிப்பு திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு

By Karthik Yash
19 Jul 2025

திருவண்ணாமலை, ஜூலை 20: திருவண்ணாமலை மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1910 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் முன்னேற்றம்தான் ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளம். எனவே, பெண்களுக்கு சொத்துரிமை, அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவித இடஒதுக்கீடு, காவல் துறையில் பெண்கள் நியமனம்,...

நண்பனை வெட்டி கொல்ல முயன்றபோது துண்டான காது ரியல் எஸ்டேட் அதிபர்கள் உட்பட 3 பேர் கைது வந்தவாசி அருகே முன்விரோத தகராறு

By Karthik Yash
19 Jul 2025

வந்தவாசி, ஜூலை 20: வந்தவாசி அருகே ஏற்பட்ட முன்விரோத தகராறில் நண்பனை கொல்ல முயன்றபோது அவரது காதை வெட்டி துண்டாக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்கள் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் நகரை சேர்ந்தவர் ஷேக் அகமது மகன் ஷேக் ரகுமான்(26) சிக்கன் கடை தொழிலாளி. இவர் நேற்று...

போளூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

By Neethimaan
18 Jul 2025

சேத்துப்பட்டு, ஜூலை 19: போளூர் அல்லி நகர் நடேசன் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் ஏழுமலை. இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு 2 மனைவி 2 மகன் 2 மகள் உள்ளனர். ஏழுமலையின் இரண்டாவது மகன் விக்னேஷ் பத்தாம் வகுப்பு வரை படித்து தற்போது மனநிலை பாதிக்கப்பட்டநிலையில் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விக்னேஷ்...