உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு துணை சபாநாயகர் உத்தரவு
கலசபாக்கம், ஜூலை 25: திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஊரக பகுதிகளில் 308 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக கடந்த 15ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 14ம் தேதிக்குள் கிராம பகுதிகளில் 81 முகாம்கள் நடத்தப்படுகிறது. ஊரக பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இதன்படி துரிஞ்சாபுரம் ஒன்றியம்...
எலக்ட்ரிக் கடையில் போதை பொருட்கள் பதுக்கி விற்றவர் கைது
ஆரணி, ஜூலை 25: எலக்ட்ரிக் கடையில் போதை பொருட்கள் பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் சிசி ரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பதாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, எஸ்ஐ...
தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் விவசாயிகள் பயனடைய அதிகாரி வேண்டுகோள் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்
கீழ்பென்னாத்தூர், ஜூலை 25: கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் 2025-26ம் ஆண்டில் 9 கிராம பஞ்சாயத்துகளில் கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 3 முதல் 5 ஆண்டுகள் தரிசு நிலமாக 10 ஏக்கர் தொகுப்பாக இருந்தால், அந்த தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை நீக்கம் செய்து, மேடு பள்ளங்களை சமன்படுத்தி, நீர்...
கிரிவலப்பாதையில் ரூ.64.30 கோடியில் புதிய தங்கும் விடுதி; 2.10 லட்சம் சதுரஅடி பரப்பளவில் அமைகிறது: திருவண்ணாமலையில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரிப்பு
திருவண்ணாமலை, ஜூலை 24: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக ரூ.64.30 கோடியில் 2.10 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தங்கும் விடுதி அமைக்கப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தென்னகத்தின் புகழ்மிக்க சைவத் திருத்தலம். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான இக்கோயில் நினைக்க முக்தித்தரும் சிறப்புக்குரியது. இங்குள்ள மலையே மகேசன் திருவடிவம். எனவே, மலையை வலம்...
ஆன்லைனில் ரூ.1.50 கோடி மோசடியில் 2 பேரை கைது செய்த மேற்கு வங்க போலீஸ் தலைமறைவான பாஜ பிரமுகர் 2 பேருக்கு வலை: வந்தவாசி அருகே பரபரப்பு
வந்தவாசி, ஜூலை 24: ஆன்லைனில் ரூ.1.50 கோடி மோசடி விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் பாஜ பிரமுகர் 2 பேரை மேற்கு வங்க போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அகரகொரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க பாஜக பிரமுகரும், தேசூர் அடுத்த மொலப்பட்டு கிராமத்தை...
சிறுமி உட்பட 5 பேரை கடித்து குதறிய தெரு நாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை செங்கம் அருகே பரபரப்பு
செங்கம், ஜூலை 24: செங்கம் அருகே சிறுமி உட்பட 5 பேரை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுப்பாளையம் அடுத்த முன்னூர் மங்கலம் கிராமத்தில் நேற்று பச்சையம்மன் கோயில் பகுதியை சேர்ந்த அம்சவள்ளி முருகன் தம்பதி. இவர்களது மகள் ரக்சிதா(2) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வந்த...
3 வீடுகளில் 4 சவரன் நகை, பணம் திருட்டு மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை
வந்தவாசி, ஜூலை 23: வந்தவாசி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் புகுந்த மர்ம ஆசாமிகள் 4 சவரன் நகை, ரூ.13 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த திரக்கோயில் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளை. இவரது மனைவி சகுந்தலா(50). இவர்களின் பிள்ளைகளுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். வெள்ளை இறந்துவிட்டதால்...
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்: வாலிபர் அதிரடி கைது
திருவண்ணாமலை, ஜூலை 23: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற வெளி நாட்டுப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலையில் உள்ள கோயில் மற்றும் ஆஸ்ரமங்களை தரிசிப்பதற்காக, வெளி நாட்டு ஆன்மிக சுற்றுலா பயணிகள் சமீபகாலமாக அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அதன்படி திருவண்ணாமலைக்கு வந்திருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த சுமார்...
அத்தி லிங்கத்திற்கு பஞ்ச வில்வ அர்ச்சனை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி
செய்யாறு, ஜூலை 23: ஆடி மாத பிரதோஷத்தையொட்டி அத்தி லிங்கத்திற்கு பஞ்ச வில்வ அர்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கூழமந்தல் கிராமத்தில் நட்சத்திர விருச்ச விநாயகர் கோயில் வளாகத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அத்தி லிங்க சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய முக்கியமாகப் பயன்படுத்தப்படும்...