2 வீடுகளில் கதவு உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு பித்தளை அண்டாவையும் தூக்கி சென்றனர் வந்தவாசி அருகே கும்பல் கைவரிசை
வந்தவாசி, ஜூலை 29: வந்தவாசி அருகே 2 வீடுகளில் கதவு உடைத்து தங்கம், வெள்ளி நகைகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். வந்தவாசி அடுத்த கொண்டையங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன்(53), மணி(45) ஆகியோரின் வீடுகள் அருகருகே உள்ளது. இந்நிலையில் இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்....
தண்டராம்பட்டு அருகே பரபரப்பு: செப்டிக் டேங்கில் பயங்கர சத்தத்துடன் வெளியேறிய காஸ்
தண்டராம்பட்டு, ஜூலை 28: தண்டராம்பட்டு அருகே செப்டிக் டேங்கில் இருந்து பயங்கர சத்தத்துடன் காஸ் வெளியேறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டராம்பட்டு அடுத்த தச்சம்பட்டு காவல் நிலையம், வருவாய் அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மார்க்கெட் கமிட்டி ஆகிய கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேக்கி வைப்பதற்காக காவல் நிலையம் எதிரே செப்டிக்...
அண்ணாமலையார் கோயிலில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்: முக்கிய சாலைகளில் கடும் நெரிசல், விடுமுறை நாளில் அலைமோதிய கூட்டம்
திருவண்ணாமலை, ஜூலை 28: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வார இறுதி விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதனால், சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இத்திருக்கோயிலை தரிசிப்பது பிறவி பெரும் பயன் என்பதால், சமீப காலமாக...
கீழ்பென்னாத்தூர் அருகே துணிகரம் அம்மன் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு: போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர், ஜூலை 28: கீழ்பென்னாத்தூர் அருகே அம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த நாரியமங்கலம் கிராமம், தோப்பு பகுதியில் ரேணுகாம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள்...
காதல் திருமணம் செய்து 2 சிறுமிகள் கர்ப்பம்: கணவர்கள் உட்பட 5 பேருக்கு போலீஸ் வலை : வந்தவாசி அருகே பரபரப்பு
வந்தவாசி, ஜூலை 26: வந்தவாசி அருகே காதலித்து திருமணம் செய்து 2 சிறுமிகள் கர்ப்பமானதால், அவர்களது கணவர்கள் உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் தவமணி(26). இவர் சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச்...
தினசரி எக்ஸ்பிரஸ் நேரடி ரயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும்: மக்களவையில் எம்பி அண்ணாதுரை வலியுறுத்தல்
திருவண்ணாமலை, ஜூலை 26: திருவண்ணாமலைக்கு கூடுதலான எண்ணிக்கையில் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க வேண்டும் என எம்பி அண்ணாதுரை வலியுறுத்தி உள்ளார். மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது, விதி எண் 377ன் கீழ் திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை தெரிவித்ததாவது: கோயில் மாநகரமான திருவண்ணாமலைக்கு அண்ணாமலையாரை தரிசனம் செய்யவும், கிரிவலம் சென்று வழிபடவும் லட்சக்கணக்கான...
தூக்க கலக்கத்தில் ஓட்டிவந்தபோது லாரி மீது பைக்கை மோதிய எஸ்ஐ படுகாயம்
சேத்துப்பட்டு, ஜூலை 26: சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சிவக்குமார். இவர் நேற்று பகல் முழுவதும் வேலை பார்த்து மீண்டும் இரவு ரோந்து பணி மேற்கொண்டார். பைக்கில் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் சென்று மீண்டும் சேத்துப்பட்டு வரும்போது அதிகாலை தூக்க கலக்கத்தில் சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது எஸ்ஐ சிவகுமார் ஓட்டி...
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு துணை சபாநாயகர் உத்தரவு
கலசபாக்கம், ஜூலை 25: திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஊரக பகுதிகளில் 308 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக கடந்த 15ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 14ம் தேதிக்குள் கிராம பகுதிகளில் 81 முகாம்கள் நடத்தப்படுகிறது. ஊரக பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இதன்படி துரிஞ்சாபுரம் ஒன்றியம்...
எலக்ட்ரிக் கடையில் போதை பொருட்கள் பதுக்கி விற்றவர் கைது
ஆரணி, ஜூலை 25: எலக்ட்ரிக் கடையில் போதை பொருட்கள் பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் சிசி ரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பதாக கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, எஸ்ஐ...