திருவாரூர் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் பருத்தி மகசூல் மும்முரம்

திருவாரூர், ஜுலை 18: திருவாரூர் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி நடைபெற்றுள்ள நிலையில் தற்போது பருத்தி பஞ்சினை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து நீரானது உரிய முறையில் கிடைத்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு...

4 பேர் கும்பலுக்கு வலை அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை

By MuthuKumar
16 Jul 2025

திருத்துறைப்பூண்டி, ஜூலை 17: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் பாக்கியராஜ், எழிலரசி, சக்கரபாணி, சிவராமன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கருணாமூர்த்தி வரவேற்றார். ஆசிரியர்கள்...

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்ற திமுக நிர்வாகி மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

By MuthuKumar
16 Jul 2025

மன்னார்குடி, ஜூலை 17: வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்ற திமுக நிர்வாகி மீது இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவத்தில் 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த அதங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் அகமது ஜும்மா(35). நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக மாணவர் அணி அமைப்பாளராக இருந்து வரும் இவர்,...

கொரடாச்சேரி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

By MuthuKumar
16 Jul 2025

நீடாமங்கலம், ஜூலை 17: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொது மக்களின் குறைகளை அவரவர் இருப்பிடத்திற்கு சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர்...

கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு முதல்வரால் திருச்சிக்கு ரூ.26,066 கோடியில் திட்ட பணி

By MuthuKumar
15 Jul 2025

திருவெறும்பூர், ஜூலை 16: கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சரால் திருச்சிக்கு ரூ.26,066 கோடியில் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நேற்று தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு...

கோரையாற்றிலிருந்து குறுவை சாகுபடிக்கு பாசன நீர் திறப்பு

By MuthuKumar
15 Jul 2025

முத்துப்பேட்டை, ஜுலை 16: முத்துப்பேட்டை அருகே புதியதாக உருவாக்கப்பட்ட பாசன வாய்க்காலில் இருந்துகுறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முத்துப்பேட்டை அருகே கோபாலசமுத்திரம் செல்லும் பள்ளியமேடு வாய்கால் என்பது கோரையாற்றில் பிரிந்து கிளந்தாங்கி ஆறு வழியாக செல்கிறது இதிலிருந்து இடும்பாவனம் உள்ளிட்ட சுற்று பகுதியில் உள்ள சாகுடி செய்யமுடியாத விவசாய...

கலெக்டர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர் மன்னார்குடி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

By MuthuKumar
15 Jul 2025

மன்னார்குடி, ஜூலை 16: பொது மக்களின் குறைகளை அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ”உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்தின் கீழ் நகரப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 வகையான சேவைகளும் அது போல்...

திருவாரூர் மாவட்டத்தில் 185 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

By MuthuKumar
15 Jul 2025

திருவாரூர், ஜூலை 16: தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் அமைந்த பின்னர் முதல்வர் மு. க ஸ்டாலின் மூலம் மக்களுக்கான பல்வேறு உன்னத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருவதுடன் மக்கள் வசிக்கும் இடங்களுக்கே அரசு நிர்வாகம் நேரில் சென்று அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில்மக்களுடன் முதல்வர்என்ற...

கோட்டூர் ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்கு வாசிப்புத் திறன் புத்தகங்கள் வழங்கல்

By MuthuKumar
14 Jul 2025

மன்னார்குடி, ஜூலை 15: கோட்டூர் ஒன்றியத்தில் 104 தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளுக்கு வாசிப்புத் திறன் வளர்ப்பதற்காக தமிழக அரசால் நூலக புத்தகங்கள் வழங்கப் பட்டுள்ளன. தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் நூலக பாட வேலைக்காக ஒரு பாடவேளை வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை செழுமைப் படுத்தும் பொறுத்து செயலி மூலம்...

விருதுநகர் மாவட்ட காவல்துறையை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By MuthuKumar
14 Jul 2025

திருவாரூர், ஜுலை 15: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில ,மாவட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய விருதுநகர் மாவட்ட காவல்துறையினரை கண்டித்து திருவாரூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் எழுச்சி நாள் கருத்தங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரையும்,...