இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவாரூர், அக். 13: இஸ்ரேல் அரசை கண்டித்து திருவாரூரில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர், மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இனப்படுகொலையை நடத்தி வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், உடனடியாக தாக்குதலை நிறுத்த கோரியும், இஸ்ரேலுக்கு துணை போகும் அமெரிக்காவை கண்டித்தும், குழந்தைகள், பெண்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் குறித்து நீதி விசாரணை...
ஓ.பி.சி, டி.என்.டி பிரிவு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு
திருவாரூர், அக். 13: திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,ஓ.பி.சி, இ.பி.சி, டி.என்.டி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, 2025-26ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவிதொகை இணையமுகவரியில் (https://scholarships.gov.in) வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இருந்து...
பொதக்குடியில் கிராம சபைக் கூட்டம்
நீடாமங்கலம், அக்.12: நீடாமங்கலம் அருகே உள்ள பொதக்குடியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஷாகிர் உஷேன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் பால்ராஜ் தீர்மானங்களை படித்து வரவேற்றார். ஒன்றிய பற்றாளராக இளநிலை உதவியாளர் சேரன் கலந்து கொண்டார். மேலும், கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர், தூய்மை பணியாளர்கள், பொதக்குடி நண்பர்கள்குழு உள்ளிட்ட பலர் கலந்து...
திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் அரசு விரைவு பேருந்து இயக்க வேண்டும்
திருத்துறைப்பூண்டி, அக்.12: திருத்துறைப்பூண்டியிலிருந்து பகல் நேரத்தில் அரசு விரைவு பேருந்து (ஏசி) இயக்கம் வேண்டும் எனதிருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து போக்குவரத்துத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தார்,சென்னையில் அமைச்சரை சிவசங்கரை நேரில் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது; திருத்துறைப்பூண்டியிலிருந்து அரசு விரைவு பேருந்துகள் (ஏசி) இரவு நேரங்களில் சென்னைக்கு இயக்கம் செய்யப்படுகிறது. பகல் நேரங்களிலும் இயக்கம்...
பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு
திருத்துறைப்பூண்டி, அக்.12: தமிழ் மொழி இலக்கியத் திறனையும் மாணவர்களிடம் மேம்படுத்தும் வகையில், ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறிவு தேர்வு’ தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் நடத்தப்படுகிறது. இத்தேர்வு வருடத்திற்கு ஒரு முறை தமிழக அளவில் அக்டோபர் மாதம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 2025-26...
மின் கம்பங்களில் விளம்பர தட்டிகளை 7 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்
மன்னார்குடி, அக். 10: மின் கம்பங்களில் கட்டப் பட்டுள்ள ஒயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா மகேஸ்வரி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத் தின் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்...
கோட்டூர் ஒன்றியத்தில் நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல்
மன்னார்குடி, அக்.10:கோட்டூர் ஒன்றியத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் அதிக மாக காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுப்பட்டனர். பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், பல கிராமங்களில் புகையான்...
முத்துப்பேட்டையில் புது வீட்டில் 2மின் மோட்டர்கள் திருட்டு
முத்துப்பேட்டை,அக்.10: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஓடக்கரை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் இவர் பிரான்ஸ் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான புதிய வீடு கட்டுமானப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலை முடிவிட்டு நேற்று காலை மீண்டும் வேலைக்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த...
திருத்துறைப்பூண்டி அரசுப்பள்ளியில் மின்னியல் தொழிற்கல்வி மாணவர்களுக்கு உள்ளுரை பயிற்சி
திருத்துறைப்பூண்டி அக் 9:திருத்துறைப்பூண்டி அரசுப்பள்ளியில் மின்னியல் தொழிற்கல்வி மாணவர்களுக்கு உள்ளுரை பயிற்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மின்னியல் தொழிற்கல்வி மாணவர்களுக்கு உள்ளுரை பயிற்சி கணேஷ் பிவிசி தயாரிப்பு நிறுவனத்தில் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. அதில் மாணவர்களுக்கு மின்சார இணைப்பு பெட்டி அதன் மூடிகள் தயாரிப்பு அதற்கு தேவையான பொருட்கள் ஆன...