திருவாரூர் தியாகராஜர் கோயிலில் வளர்பிறையை முன்னிட்டு பிரதோஷ விழா கோலகலம்
திருவாரூர், ஜுலை 9: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் நந்தி பெருமானை தரிசனம் செய்தனர். அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில்வரும் வரும் பிரதோஷ நாளில் பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் கோயில்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது...
திமுக இளைஞர் அணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம்
நீடாமங்கலம், ஜூலை 9: தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நீடாமங்கலம் பெரியார் சிலை ஆருகில் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் பேரூர் செயலாளர் இராஜசேகரன் தலைமையில் வடக்கு ஒன்றிய செயலாளர்ஆனந்த்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பனங்குடி குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது....
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை
திருத்துறைப்பூண்டி, ஜூலை 8: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையினை திருத்துறைப்பூண்டி நகரம் 6 வது வார்டில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் நகர செயலாருமான ஆர் எஸ் பாண்டியன்தொடங்கி வைத்தார்.இதில் நகர இளைஞர்...
திருவாரூரில் குறைதீர் கூட்டத்தில் 249 மனுக்கள் பெறப்பட்டன
திருவாரூர், ஜுலை 8: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் 249 மனுக்கள் பெறப்பட்டன. திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா...
மன்னார்குடி அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2பேர் கைது
மன்னார்குடி, ஜூலை 8: மன்னார்குடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த பரவாக்கோட்டை போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு டிரா க்டர்களை பறிமுதல் செய்தனர். பரவாக்கோட்டை போலீசார் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அவ்வழியே சட்ட விரோதமாக உரிய அனுமதியின்றி ஆற்று படுகை மணல் கடத்தி வந்த...
அய்யாளம்மன் படித்துறையில் ஐயப்பனுக்கு தீர்த்தவாரி
திருச்சி, ஜூலை 7:திருச்சி காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் ஐயப்பனுக்கு நடந்த தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மண்டல மற்றும் மகர விள க்கு காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் காலம்காலமாக கடைபிடித்து வரும் ஐதீகங் களை கடைபிடித்து, முறையான மண்டல விரதமிருந்து சபரிமலை ஐயப்பனின்...
முத்துப்பேட்டையில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
முத்துப்பேட்டை, ஜுலை 7: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை வனிதா தலைமை வகித்தார். இதில் மாணவிகள் மத்தியில் போதை பொருள்கள் குறித்தும், அதன் தீமைகள் குறித்தும், போதை பொருட்களால் குடும்ப சூழல்...
நீடாமங்கலம் முருகன் கோயிலில் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
நீடாமங்கலம், ஜூலை 7: நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்,அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்...
மடப்புரம் கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலய 43ம் ஆண்டு திருவிழா
திருத்துறைப்பூண்டி, ஜூலை 7: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் 43 ம் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. முன்னதாக உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்கவும் கிறிஸ்தவர்கள்...