கட்டிமேடு அரசு பள்ளியில் சர்வதேச அறிவியல் தின கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி, நவ. 12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச அறிவியல் தினம் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்து பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ம் தேதி சர்வதேச அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் அறிவியலின் முக்கிய பங்கு எடுத்துரைக்கவும்,...

பேச மறுத்த காதலியை வெட்டிய வாலிபர் கைது

By Ranjith
11 Nov 2025

மன்னார்குடி, நவ. 12: கூத்தாநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதான இளம் பெண். இவர் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டு வீட் டில் இருந்து வந்தார், இவரும், பானிபூரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த அபிஷேக் (20) என்ற வாலிபரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காத லித்து வந்தாக கூறப்படுகிறது. கருத்து...

பைக்குகள் மோதி ஒருவர் படுகாயம்

By Suresh
11 Nov 2025

திருவாரூர், நவ. 11:திருவாரூர் பெருங்குடி கீழப்படுகை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(40). இவர் தனது ைபக்கில் திருவாரூர் ரயில் நிலையம் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே கொடிக்கால்பாளையம் சேர்ந்த முகமது ஆதில்(22) என்பவர் ஓட்டிவந்த ைபக் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சுரேசுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு...

வடபாதிமங்கலத்தில் வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

By Suresh
11 Nov 2025

மன்னார்குடி, நவ. 11: திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் காவல் சரகத்திற்குட்பட்ட சோலாட்சி குலமாணிக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(45). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் கெளசிக்(21). திருமணமாகாதவர். மினிவேன் டிரைவராக வேலை செய்து வந்த கெளசிக்கு மது அருந்தும் பழக் கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால், அவர் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதை...

ஆண்டாங்காரை கிராமத்தில் சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி

By Suresh
11 Nov 2025

திருத்துறைப்பூண்டி, நவ. 11: திருத்துறைப்பூண்டி அருகே ஆண்டாங்காரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இப்பகுதி குடியிருப்புகளின் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்டது. தற்போது மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் நான்கு தூண்களும் சேதம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக...

மனவளக்கலை அறிவுத்திருக்கோவிலில் மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி

By Ranjith
06 Nov 2025

திருத்துறைப்பூண்டி,நவ.7: மனவளக்கலை அறிவுத்திருக்கோவிலில் மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி நடந்தது. திருத்துறைப்பூண்டி மனவளக்கலை அறிவுத்திருக்கோவிலில் பிரைட் பீப்பிள் சமுதாயக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை தஞ்சை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் பூர்ணச்சந்திரன் நடத்தினார். திருத்துறைப்பூண்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் சுதந்திர மணி தலைமை வகித்தார். பிரைட் பீப்பிள் சமுதாயக்...

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மரக்கன்று நடும் பணி

By Ranjith
06 Nov 2025

திருத்துறைப்பூண்டி,நவ.7: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மரக்கன்று நடும் பணி நடந்தது. திருத்துறைப்பூண்டி நகராட்சியை பசுமையாக்கும் திட்டத்தின்படி பழமரங்கள் நடும் பணியை நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதி, பாலம் தொண்டு சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறிகையில் தற்போது நகராட்சி முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு...

அங்கன்வாடி உதவியாளரை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் மீது வழக்கு

By Ranjith
06 Nov 2025

வலங்கைமான்,நவ.7: வலங்கைமான் அடுத்த பூந்தோட்டம் பகுதியில் அங்கன்வாடி உதவியாளரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த பூந்தோட்டம் பகுதி மேலத்தெரு சேர்ந்தவர் ரமேஷ் மனைவி காமாட்சி அம்மாள் (47). அங்கன்வாடி உதவியாளர். இவர் அரித்துவாரமங்கலம் காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், அதே பகுதியில் ஹானஸ்ட்ராஜ் என்பவர் மனைவிக்கு...

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த படிவங்கள் வழங்கும் பணி

By Ranjith
05 Nov 2025

திருத்துறைப்பூண்டி, நவ. 6: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்றது.திருத்துறைப்பூண்டி 166 (அவ)சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணி தொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் அமுதா தலைமையில் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது....

முத்துப்பேட்டையில் போதையில் நின்று தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது

By Ranjith
05 Nov 2025

முத்துப்பேட்டை, நவ. 6: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையம் எதிரே உள்ள அரசு மருத்துவமனைக்கு செம்படவன்காடு ஊமை கொல்லை தாவூது நகரை சேர்ந்தவர் விமலநாதன் (23). இவர் காலில் அடிப்பட்டு சிகிச்சைக்காக வந்தார். அப்போது கடும் குடிபோதையில் இருந்ததால் மருத்துவமனை எதிரே நின்று சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களை ஆபாசமாகவும், தகராத வார்த்தைகளாலும்...