முத்துப்பேட்டையில் அப்துல் கலாம் படத்திற்கு அஞ்சலி
முத்துப்பேட்டை, ஜூலை 28: முத்துப்பேட்டையில் கலாம் கனவு இயக்கம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தின நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மூத்த மருத்துவர் டாக்டர் மீரா உசேன் அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கலாம் கனவு இயக்க திட்ட இயக்குநர் சாகுல்...
திருவாரூரில் வரும் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவாரூர், ஜுலை 28: திருவாரூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 31ம் தேதி நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலும், இதேபோல் கோட்ட அளவில் ஆர்.டி.ஒக்கள் தலைமையில் திருவாரூர்...
முத்துப்பேட்டையில் பெட்ரோல் ஊற்றி பைக் எரிப்பு
முத்துப்பேட்டை, ஜூலை26: முத்துப்பேட்டையில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். முத்துப்பேட்டை புதுத்தெரு பட்டறைக்குளம் படித்துறை அருகே வசிப்பவர் ஜெகபர் சாதிக் மகன் முகமது சகில்(21) இவர், தனக்கு சொந்தமான விலை உயர்ந்த கேடிஎம் இரு சக்கர வாகனத்தை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல்...
கோர்ட்டில் ஆஜராக வந்த திமுக நிர்வாகியை வெட்டிய வழக்கில் 2 பேர் கைது
மன்னார்குடி, ஜூலை 26: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த அதங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் அகமது ஜும்மா (35). நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக மாணவர் அணி அமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வரும் அடிதடி வழக்கு விசாரணைக்கு ஆஜராக கடந்த 17ஆம் தேதி காலை வீட்டிலிருந்து பைக்கில்...
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய சி.பி.எஸ் ஒழிப்பு இயக்க சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவாரூர், ஜூலை 26: புதிய பென்ஷன் திட்டத்தினை ரத்து செய்யக்கோரி சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட கோரி திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பாக சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அமைப்பாளர் ராகுலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்...
திருவாரூர் மாவட்டத்தில் புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் 13,000 மாணவர்கள் பயன்
திருவாரூர் ஜூலை 25: திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் புதுமை பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 13 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ந் தேதி ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அன்று முதல் தற்போது வரையில் மக்களுக்கான பல்வேறு...
கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுது பார்க்க விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் ஜூலை 25:தமிழ்நாட்டில் சொந்தக் கட்டங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. மேற்படி திட்டத்தின் கீழ் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான பெஞ்சுகள் மற்றும் தேவாலையத்திற்கு...
திருவாரூரில் ஆடி அமாவாசையையொட்டி கமலாலய குளத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
திருவாரூர், ஜூலை 25: ஆடி அமாவாசையையொட்டி திருவாரூரில் உள்ள கமலாலய குளத்தில்ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் கார்த்திகை தினங்கள் புன்னியகாலம் என்று சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுவதால் இந்த தினங்களில் பொது மக்கள் விரதம் இருந்து கோயில்களுக்கு சென்று வழிப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆடி...
ரேஷன் பொருட்கள் வாங்க விரும்பாத பொதுமக்கள் பண்டகமில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்
திருவாரூர், ஜுலை 24: இது குறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களின் விருப்பத்திற்கு இணங்க பண்டகமில்லா குடும்ப அட்டை, சர்க்கரை குடும்ப அட்டை, முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டை என...