கல்வி கடன் வழங்கும் முகாம்
திருவாரூர், நவ. 25: திருவாரூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் தேசிய வங்கி கிளைகளில் நாளை நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயின்றுவரும் மாணவ, மாணவிகளுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் அனைத்து தேசிய வங்கி கிளைகள் இணைந்து நடத்தும் கல்விக்கான...
திருத்துறைப்பூண்டியில் கனமழை காரணமாக வீடுகளில் புகுந்த தண்ணீர் உடனடியாக வெளியேற்றி நகராட்சி அதிரடி
திருத்துறைப்பூண்டி, நவ. 25: திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் கனமழை காரணமாக 15க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தண்ணீரை வௌியேற்றியது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை...
சாலையில் பெருக்கெடுத்த மழைநீர் திருத்துறைப்பூண்டியில் மழையின் சதிராட்டத்தால் ஆயிரம் ஏக்கர் தாளடி நெற்பயிர்களை மூழ்கடித்த மழைநீர்
திருத்துறைப்பூண்டி, நவ. 25: திருத்துறைப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் மழையின் சதிராட்டத்தால் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதை கண்டு செய்வதறியாது விவசாயிகள் பரிதவித்து நிற்கின்றனர். தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்யும்...
அஞ்சல் துறையில் காலியிடங்களை நிரப்ப கோரி வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகை போராட்டம்
திருத்துறைப்பூண்டி,நவ.22: ரயில்வே, அஞ்சல் துறையில் காலியிடங்களை ஒன்றிய அரசு நிரப்ப கோரி வேலைவாய்ப்பு அலுவலகத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வரும் 25ம்தேதி முற்றுகை போராட்டம் நடத்துகிறது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளதாவது: ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் உடனே நிரப்பிட வேண்டும், தமிழ்நாட்டில்...
வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி, நவ.22: தமிழ்நாடு வருவாய்த்துறை, கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில மையத்தின் முடிவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், சிவனார்தாங்கள் வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வரும் ஜாஹிதா பேகம் (வாக்குச்சாவடி நிலை அலுவலர்) என்பவர் எஸ்ஐஆர் படிவம் வழங்கும் பணியின்போது மேலதிகாரிகளின் அதீத அழுத்தத்தினால் ஏற்பட்ட பணிச் சுமையின் காரணமாக மிகுந்த மன...
திருவாரூர் மாவட்டத்தில் 5வது நாளாக மிதமான மழை
திருவாரூர்,நவ.22: வடகிழக்கு பருவமழையையொட்டி வங்ககடலில் உருவாகவுள்ள புயல் சின்னம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட தலைநகரான திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக காலை முதல் மாலை வரையில் விட்டுவிட்டு சாரல் மழையாக பெய்து வந்தது. இந்நிலையில் 4வது நாளாக...
மன்னார்குடியில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
மன்னார்குடி, நவ. 21: போலியோ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மன்னார்குடியில் ரோட்டரி சங்கங்கள் சார்பில், போலியோ தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. முன்னதாக ராஜகோபால சுவாமி கோவில் அருகில் இருந்து ரோட்டரி உதவி ஆளுநர்.வெங்கடேஷ் முன்னிலையில் துவங்கிய பேரணியை டிஎஸ்பி மணிவண்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியின் நோக்கம் குறித்து போலியோ பிரிவு தலைவர் சிவச்சந்திரன் பேசினார்....
சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர், நவ. 21: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிக்கோரி திருவாரூரில் நேற்று செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். உச்ச நீதிமன்ற மேல்முறையீடு வழக்கினை கைவிட வேண்டும். பறிக்கப்பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் தரம் 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கவேண்டும், தேர்தல் வாக்குறுதி எண்...
நலிவுற்ற கலைஞர்கள் உதவித்தொகை பெற சிறப்பு முகாம்
திருவாரூர், நவ. 21: திருவாரூர் மாவட்டத்தில் நலிவுற்ற கலைஞர்களுக்கான உதவிதொகை பெறுவதற்கு சிறப்பு முகாமானது நாளை தாலுக்கா அலுவலகங்களில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியக்கலைகள், ஓவியம், சிற்பம் ஆகிய கலைத்துறைகளில் குறிப்பிடத்தக்க வகையில் சேவையாற்றிய திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 58 வயது...