குறுவை பயிர் காப்பீட்டு கால அவகாசம் நீட்டிப்பு: வேளாண் இணை இயக்குனர் தகவல்
தஞ்சாவூர், ஆக 3: குறுவை பயிர் காப்பீட்டு கால அவகாசம் வரும் 14-ம் தேதி வரை நீட்டிப்பு, வேளாண்மை இணை இயக்குனர் வித்யா தகவல். இது குறித்து அவர் கூறியதாவது: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2024- 25 காரிப் பருவம் குறுவை நெற்பயிர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 31ம்தேதி முடிவு...
முத்துப்பேட்டை அருகே மருதங்காவெளி அரசுப் பள்ளியில் தற்காப்புகலை பயிற்சி
முத்துப்பேட்டை, ஆக.2: முத்துப்பேட்டை அருகே மருதங்காவெளி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார வளமையம் சார்பில் கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைப்பயிற்சிகள் நடைப்பெற்றது. இதற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். இதில் கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைப்பயிற்சிகளை கராத்தே பயிற்றுனர் சரகணபதி மாணவர்களுக்கு வழங்கி பயிற்சி அளித்தார். இதில்...
முத்துப்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது
முத்துப்பேட்டை, ஆக.2: முத்துப்பேட்டை அருகே கஞ்சா கடத்திய சிறுவன் உள்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துப்பேட்டை அருகே எடையூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சங்கேந்தி அருகே சந்தேகத்திற்கூறிய வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்றுக்கொண்டிருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்....
காரைக்காலில் இருந்து காரில் கடத்திய டின் பீர்கள் பறிமுதல்
திருவாரூர், ஆக. 2: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காரைக்காலிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட டின் பீர்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேர்களை கைது செய்தனர். இந்நிலையில் நன்னிலம் மதுவிலக்கு அமுல்பிரிவு தலைமை காவலர் கவியழகன் மற்றும் போலீசார் நேற்று கந்தன்குடி சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது புதுவை...
நீடாமங்கலம் அருகே முன்னாவல்கோட்டை கபடி போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
நீடாமங்கலம், ஆக.1: நீடாமங்கலம் அருகே முன்னாவல்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் கபடியில் சாதனை படைத்தனர். மன்னார்குடி அளவிலான குறுவட்ட போட்டி மூன்றாவது நாளாக தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. அதில் நடுவராக நாராயண மூர்த்தி, தமிழ்வாணன்,பசுபதி, உதயகுமார், துரையரசன் ,சேகர் நடுவர்களாக பணியாற்றினர். அண்டர் 14 சிறுவர்களுக்கான கபடி போட்டியில் 21...
வலங்கைமான் வயல்வெளி பகுதிகளில் புதிய மின்கம்பங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
வலங்கைமான், ஆக.1:வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் வேளாண்மை பணி மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் மோட்டார் களுக்கு செல்லும் மின் கம்பங்கள் பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வான நிலைகள் உள்ளது. பல இடங்களில் மின்கம்பங்கள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பி தெரியும் வகையில்...
நீடாமங்கலத்திலிருந்து திருப்பூருக்கு 2,000 டன் நெல் அரவைக்கு ரயிலில் அனுப்பிவைப்பு
நீடாமங்கலம், ஆக.1: நீடாமங்கலத்திலிருந்து திருப்பூருக்கு 2,000 டன் நெல் ரயிலில் அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர், வலங்கைமான் உள்ளிட்ட தாலுக்கா பகுதிகளில் செயல் பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை, சம்பா ,தாளடி மற்றும் கோடை சாகுபடி செய்த நெல் அறுவடை விற்பனை செய்த...
புதிய அங்கன்வாடி மையத்திற்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
திருத்துறைப்பூண்டி, ஜூலை 31: திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தின் சார்பில் வரம்பியம் புதிய அங்கன்வாடி மையத்திற்கு விளையாட்டு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் சங்க முன்னாள் தலைவர்கள் காளிதாஸ், மாணிக்கவாசகம், துணைச்செயலாளர்கள் செல்வகணபதி, பிரபாகரன், மணிகண்டன், தலைவர் மதன், செயலர் கார்திக், பொருளாளர் கோகுலவசந்த் ஆகியோர் வரம்பியம் ஊராட்சி புதிய அங்கன்வாடி...
உங்களுடன் ஸ்டாலின் முகாம்வீடு வீடாக சென்று விண்ணப்பங்கள் விநியோகம்
திருத்துறைப்பூண்டி, ஜூலை 31: திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக நகர்மன்ற தலைவர் வழங்கினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி வார்டு எண் -4,5,16 ஆகிய வார்டுகளில் உள்ள உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை 1ம் தேதி திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதனை...