வருவாய் கோட்ட அளவில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவள்ளூர், ஜூலை 11: திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் இன்று காலை 10 மணிளவில் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சப்-கலெக்டர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள்...
பழமை வாய்ந்த ஆலமரம் மறுநடவு
ஆர்.கே.பேட்டை, ஜூலை 10: ஆர்.கே.பேட்டை அடுத்த கோபாலபுரம் சாலை விரிவாக்க பணியின்போது அகற்றப்பட்ட 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், திருத்தணி கோபாலபுரம் ஊராட்சியில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, திருத்தணி - சித்தூர் சாலையில் சாலை விரிவாக்கப் பணியின்போது, சாலையோரத்தில் இருந்த 100 ஆண்டு...
3 தளங்கள் கொண்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஆவடி பேருந்து நிலையத்தில் ரூ.36 கோடியில் மேம்பாட்டு பணி: அமைச்சர்கள் அடிக்கல்
ஆவடி, ஜூலை 10: ஆவடி மாநகர போக்குவரத்து பேருந்து நிலையத்தில் ரூ.36 கோடி மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சா.மு.நாசர், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனர். சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, பக்தவத்சலபுரத்தில் 1.93 ஏக்கர் பரப்பளவில் ஆவடி மாநகர போக்குவரத்து கழக...
ஏரியில் அதிகளவு மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்களின் முற்றுகை காரணமாக குவாரி மூடல்: பெரியபாளையம் அருகே பரபரப்பு
ஊத்துக்கோட்டை, ஜூலை 10: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததை கண்டித்து, கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் குவாரி மூடப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு, சுமார் 900...
நாளுக்குநாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் திருத்தணி கோயிலில் ரூ.26 கோடியில் 4 தளங்கள் கொண்ட அன்னதான கூடம்: சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தகவல்
திருவள்ளூர், ஜூலை 9: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் எஸ்.காந்திராஜன் தலைமையில், கலெக்டர் மு.பிரதாப், மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் இராம.கருமாணிக்கம், சின்னதுரை, சேவூர் எஸ்.இராமச்சந்திரன், மு.பன்னீர்செல்வம், வெங்கடேஷ்வரன், ஈ.ராஜா, எஸ்.எஸ்.பாலாஜி, மாதவரம் எஸ்.சுதர்சனம், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன்...
உலகின் 7 கண்டங்களின் உயரமான மலைகள் மீது ஏறி சாதனை படைத்த பெண்ணுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
போரூர், ஜூலை 9: உலகின் 7 கண்டங்களின் உயரமான மலைகளின் மீது ஏறி சாதனை படைத்த பெண்ணுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஜோக்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் உலகில் உள்ள 7 கண்டங்களின் உயரமான மலை சிகரங்கள்...
குடிநீர் குழாயை சீரமைப்பதில் அலட்சியம் ஊராட்சி, நகராட்சி நிர்வாகம் போட்டி போட்டு அலைக்கழிப்பு: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு
திருவள்ளூர், ஜூலை 9: திருவள்ளூர் அடுத்த பத்தியால்பேட்டை அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தேங்கிய தண்ணீரை அகற்றி, உடைந்த குழாயினை சீரமைப்பதில் ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த பத்தியால்பேட்டை, காமாட்சி அவென்யூவில்...
பொன்னேரி அடுத்த தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை ரூ.820.59 கோடி மதிப்பீட்டில் ஆறுவழிச்சாலை பணி விறுவிறு: இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு
ஊத்துக்கோட்டை , ஜூலை 8: பொன்னேரி அடுத்த தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை ரூ.820.59 கோடியில் ஆறுவழிச்சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சிங்கப்பெருமாள்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சென்னை - எண்ணூர் துறைமுகத்திற்கு...
திருத்தணி முருகன் கோயிலில் கடைகள் உரிமை கோர இன்று ஆன்லைன் டெண்டர்
திருத்தணி, ஜூலை 8: திருத்தணி மலைக்கோயிலில், முருகப்பெருமானை தரிசிக்க வருகை தரும் பெரும்பாலான பக்தர்கள் முருகனுக்கு மலர்மாலை அணிவித்து தரிசனம் செய்ய விரும்புகின்றனர். கடந்த காலங்களில் மலைக்கோயிலில் மலர்மாலை, பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு திருக்கோயில் அலுவலகத்தில் நேரடி முறையில் பொது ஏலம் நடைபெற்று, வியாபாரிகள் கடைகளுக்கு உரிமம் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு...