திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.6.33 கோடியில் 2 புதிய கட்டிடப்பணி
திருவள்ளூர், ஜூலை 17:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பாக ரூ.3 கோடி மதிப்பில் புதிய சுற்றுலா மாளிகை கட்டடப் பணிகள் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பாக ரூ.3.33 கோடி மதிப்பில் புதிய மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக கட்டடப் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது....
ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம்; அங்கன்வாடி மையம் திறப்பு
பள்ளிப்பட்டு, ஜூலை 17: பள்ளிப்பட்டு அருகே நொச்சிலியில் மகளிர் சுய உதவி குழு சார்பில் நியாய விலைக் கடை செயல்பட்டு வந்தது. பலவீனமடைந்த கட்டிடத்தில், செயல்பட்டு வந்த நியாயவிலைக் கடையில் முறையாக பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், இடிந்து விழும் அபாய நிலை கட்டிடம் இருப்பதாகவும் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து...
மழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
புழல், ஜூலை 16: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் செங்குன்றம், சோழவரத்தில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 300 கன...
துணை முதல்வர் பங்கேற்கும் விழா பந்தல் அமைக்கும் பணி : எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
திருவள்ளூர், ஜூலை 16: பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், வரும் 20ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ப.ச.கமலேஷ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் முத்தமிழ் செல்வன், ஒன்றிய நிர்வாகிகள்...
கும்மிடிப்பூண்டியில் நெருப்பில் சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலக சாதனை: எம்எல்ஏ பரிசு வழங்கினார்
கும்மிடிப்பூண்டி, ஜூலை 16: கும்மிடிப்பூண்டியில் நெருப்பில் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பரிசு வழங்கினார். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் சிலம்ப கலைக்கூடத்துடன் யுனிகோ வேல்ட் ரெக்கார்ட் நிறுவனம் இணைந்து நடத்திய உலக சாதனை சிலம்பாட்ட போட்டிகள் நேற்று நடைபெற்றது. சிலம்பாட்ட பயிற்சியாளர் வினோத் அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசான்கள்...
எஸ்ஏ கல்லூரியில் இளைஞர் தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கு
திருவள்ளூர், ஜூலை 14: பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மைப் புலம், ‘உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இளைஞர் தலைமைத்துவம்’ என்ற கருத்தரங்கினை கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ்ராஜா உத்தரவின் பேரில் நடத்தியது. சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான ஆடாசியஸ் ட்ரீம்ஸ் அறக்கட்டளையின் திட்டத் தலைவர் சுஹைல் அக்தர்...
காட்சிப் பொருளான புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
ஊத்துக்கோட்டை, ஜூலை 14: பெரியபாளையம் ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு, ஊரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இங்குள்ள பவானி அம்மன் கோயிலுக்கு வந்து செல்வார்கள். ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வழங்க...
11 அடி உயர முனீஸ்வரர் சிலைக்கு கும்பாபிஷேகம்: கிராம மக்கள் பெருந்திரளாக தரிசனம்
திருத்தணி, ஜூலை 14: திருத்தணி அருகே, எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் எல்லையம்மன் குளக்கரையில் புதிதாக முனீஸ்வரருக்கு 11 அடி உயரத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலையைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு யானை மற்றும் குதிரை வாகனங்கள் மற்றும் பச்சையம்மன் சிலைக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முனீஸ்வரர் சிலைக்கு கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று...
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2 லட்சம் டன் கரும்புகள் அரவை செய்ய இலக்கு: அக்டோபரில் பணி தொடங்குகிறது
திருத்தணி, ஜூலை 11: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டில் கரும்பு அரவை 2 லட்சம் டன்னாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் மாதத்தில் அரவை தொடங்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 7...