வேப்பம்பட்டில் மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி
திருவள்ளூர், டிச.10:திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு வள்ளலார் நகரை சேர்ந்த தர்மேந்திரன் (45). இவரது மனைவி தீபா (40). இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தர்மேந்திரன் திருநின்றவூர் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர் பால் சிங். இவர் வேப்பம்பட்டு, பூங்காவனத்தம்மன் கோயில் தெருவில் ஜோதிட கற்கள் விற்பனை செய்யும் கடையை...
8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
சென்னை, டிச.10: தெருவில் விளையாடிய 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் கடந்த 2021 மே 17ம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிய 8 வயது சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த வாலிபர்...
ஓரமாக போக சொன்னதால் ஆத்திரம் பெண் தூய்மை பணியாளரை தாக்கிய காஷ்மீர் வாலிபர்
மாதவரம், டிச.9: ஓரமாக போக சொன்னதால் ஆத்திரமடைந்து பெண் தூய்மை பணியாளரை தாக்கி, கழுத்தை அறுத்து விடுவதாக இந்தியில் பேசிய ஜம்மு காஷ்மீர் வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொருக்குபேட்டையை சேர்ந்தவர் லட்சுமி (43). இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் தூய்மை பணி மேற்கொண்டு வருகிறார். வழக்கம் போல் லட்சுமி நேற்று முன்தினம் எழும்பூர்...
வயிறு நோய்களுக்கு மருத்துவ முகாம்
திருத்தணி, டிச.9: திருத்தணியில் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து, திருத்தணியில் குடலிறக்கம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆலோசனை மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமிற்கு, சங்கம் தலைவர் பரந்தாமன் தலைமை தாங்கினார். ஆசிரியர் மாசிலாமணி வரவேற்றார். இதில், தொடக்க கல்வி இயக்கம் துணை இயக்குநர் (நிர்வாகம்) சுப்பாராவ் பங்கேற்று முகாமை...
அரசு மாநகர பேருந்தில் பயணம் செய்த தொழிலாளி மயங்கி விழுந்து பலி
திருவள்ளூர், டிச.9: திருவள்ளூர் அடுத்த அரசு மாநகர பேருந்தில் பயணம் செய்த, பூ மாலை கட்டும் தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் அடுத்த பழைய கரிக்கலவாக்கத்தை சேர்ந்தவர் உமாபதி (39). இவருக்கு சங்கீதா (36) என்ற மனைவியும் (16) மற்றும் 14 வயதுகளில் இரண்டு மகன்களும் உள்ளனர். உமாபதி பூ கட்டும் தொழில்...
போதையில் வாலிபர் ஓட்டிய கார் மோதி 5 வாகனம் சேதம்
மாதவரம், டிச.8: போதையில் காரை தாறுமாறாக ஓட்டி பைக் உள்பட 5க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் நேற்று முன்தினம் கார் ஒன்று தறிகெட்டு ஓடி, பைக்கில் சென்ற நபர் மீது மோதியது. இதனால் பொதுமக்கள் அந்த காரை பிடிக்க முயன்றபோது அதிவேகமாக சென்றுவிட்டது....
திருவள்ளூரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: கொலையா? தற்கொலையா? என விசாரணை
திருவள்ளூர், டிச.8: திருவள்ளூரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சந்துரு (26). இவர் மணவாளநகர், கருணாநிதி தெருவில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்....
பழவேற்காடு அரங்கங்குப்பம் அருகே கரை ஒதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு
பொன்னேரி, டிச.8: பொன்னேரி, டிச.8: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, பழவேற்காடு அரங்கங்குப்பம் கடற்கரை பகுதி அருகே மர்ம பொருள்கள் மூன்றாவது முறையாக கரை ஒதுங்கியது. இதுகுறித்து, திருப்பாலைவனம் காவல்துறையினருக்கும், வருவாய்த்துறையினற்கும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய அந்த மர்ம பொருட்களை மீட்டு ஆய்வு செய்தனர். இதில்,...
அம்பேத்கர் நினைவு நாளில் 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடியில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர், எம்எல்ஏக்கள் வழங்கினர்
திருவள்ளூர், டிச.7: திருவள்ளூர், அம்பேத்கர் நினைவு நாளையொட்டி 2034 பயனாளிகளுக்கு ரூ.21.90 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்எல்ஏக்கள் வழங்கினர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, திருவள்ளூரில்...