வீட்டுக்குள் விளையாடியபோது வாளி நீரில் தவறி விழுந்து பெண் குழந்தை பரிதாப பலி
பூந்தமல்லி, ஆக. 3: மதுரவாயல் அடுத்த வானகரம், பாப்பம்மாள் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் அசோத்தமன் (36), ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சவுமியா (30). இந்த தம்பதிக்கு 3 வயது மற்றும் ஒரு வயதில் தீக்சா ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில்...
பூண்டி நீர்த்தேக்க அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற ரூ.3.60 கோடியில் உணவக கட்டிடம்: முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்
திருவள்ளூர், ஆக. 2: பூண்டி நீர்த்தேக்க அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற ரூ.3.60 கோடியில் அமைக்கப்பட்ட உணவக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை பெருநகர் மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்க அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சுற்றுலாத்துறை...
அரசு பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவனை கண்டித்த நடத்துநர் மீது தாக்குதல்
திருத்தணி, ஆக. 2: அரசு பேருந்தில் படிக்கட்டுகளில் பயணம் செய்த பள்ளி மாணவன் தட்டி கேட்ட நடத்துனரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 5.45 மணியளவில் வீரமங்கலம் செல்லும் அரசு பேருந்து தடம் எண்:65ல் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயணம் செய்தனர். அரசுப் பேருந்து தற்காலிக ஓட்டுநராக...
முதன்முறையாக ஜூலை மாதம் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயிலில் பயணம்: மெட்ரோ நிர்வாகம் தகவல்
மாதவரம், ஆக.2: முதன்முறையாக ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலில் பயன் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு...
ரூ.5.34 கோடி ஊக்கத்தொகை விடுவிப்பு தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி
திருத்தணி, ஆக 1: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டுதோறும், சாகுபடி செய்த கரும்புகளை லாரிகளில் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகின்றனர். இந்தநிலையில் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...
கும்மிடிப்பூண்டி அருகே மங்காவரத்தான் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்
கும்மிடிப்பூண்டி, ஆக. 1: கும்மிடிப்பூண்டி அடுத்த சேலியம்பேடு ஊராட்சி மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தில் மங்காவரத்தான் 53 அடி பத்ரகாளி அம்மன் கோயிலில் 12ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கடந்த 28ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வும், 29ம் தேதி பால் குடம் ஊர்வலம், அம்மன் கரகம் ஊர்வலம் வருதல்...
பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்
பெரியபாளையம், ஆக. 1: பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கன்னிகைப்பேர் கிராமத்திற்கு அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சுமார் 8 அடி உயரத்திற்கு தண்ணீர் மேலே பீய்ச்சி அடிக்கப்பட்டு வீணாக வெளியேறி வருகிறது. கோடைக்காலம் முடிந்தும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் குடிநீர்...
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.5.34 கோடி சிறப்பு ஊக்கத்தொகை விடுவிப்பு: கலெக்டர் தகவல்
திருவள்ளூர், ஜூலை 31: திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருத்தணி கூட்டுறவு சர்க்கரையில் 2024-25ம் ஆண்டு அரவை பருவத்திற்கு 1,52,982.310 மெட்ரிக் டன் அரவை செய்யப்பட்டது. இந்த, அரவை பருவத்திற்கு கரும்பு சப்ளை செய்த மொத்தம் 1,526 விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் மொத்த...
குழந்தைகள் நலன் விருது பெற விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர், ஜூலை 31: தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறைக்கீழ் வெளியிடப்பட்ட அரசாணையின்படி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது. விருதுகள் பெற இளைஞர் நீதி சட்டம் (பாதுகாப்பு...