ஆந்திராவில் மகசூல் 2 மடங்கு அதிகரித்ததால் வாழைப்பழ விலை கடும் வீழ்ச்சி
சென்னை, டிச.3: வாழைப் பழங்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், போதிய விற்பனையின்றி வீணாகி வருவதால், வியாபாரிகள் கால்நடைகள் மற்றும் குரங்களுக்கு உணவாக கொட்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் உள்ள ரயில்வே கோடூர், ராஜம்பேட்டை ஆகிய பகுதிகள் வாழை சாகுபடியில் இந்திய அளவில் பெயர் பெற்றது. இப்பகுதிகளில் பல ஆயிரம்...
டிட்வா புயல் தொடர் மழை திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை குறைவு
திருத்தணி, டிச.3: டிட்வா புயல் தொடர் மழை காரணமாக திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி...
பள்ளிப்பட்டு அருகே உயரழுத்த மின்கம்பியில் சிக்கி ஆண் மயில் பலி
பள்ளிப்பட்டு, டிச.3: பள்ளிப்பட்டு அருகே உயரழுத்த மின்கம்பியில் சிக்கி ஆண் மயில் பரிதாபமாக பலியானது. பள்ளிப்பட்டு அருகே காப்புக் காட்டில் மான், மயில், உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், நொச்சிலி காப்புக்காடு பகுதியில் நேற்று மதியம் இரை தேடி பறந்து சென்ற மயில் நொச்சிலி மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள உயரழுத்த மின்...
போரூர் ராமநாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
பூந்தமல்லி, டிச.2: போரூர் ராமநாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். போரூரில் மிகவும் பழமையான சிவகாம சுந்தரி உடனுறை ராமநாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதிகாலை 4 மணியளவில் 6ம் கால யாக பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. காலை 6 மணி...
காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்திற்கு புதிய கட்டிடம்: ஆணையர் சங்கர் திறந்து வைத்தார்
ஆவடி, டிச.2: ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில், ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் எச்சிஎல் டெக்னாலஜி ஹோப் பவுண்டேஷன் உதவியுடன் தரை மற்றும் முதல் தளத்துடன் நூலகம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்நிலையில், காவலர் சிறார் மற்றும் சிறுமிய மன்ற புதிய கட்டிடத்தை ஆவடி காவல்...
பூந்தமல்லி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி
பூந்தமல்லி, டிச.2: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டிட்வா புயல் தாக்கம் காரணமாக நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. குறிப்பாக பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், மதுரவாயல், திருவேற்காடு, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கியது. பூந்தமல்லி ட்ரங்க் சாலை காட்டுப்பாக்கம் அருகே...
திருத்தணியில் புயலால் பாதிப்பு இல்லை
திருத்தணி, டிச.1: டிட்வா புயல் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்து துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால், ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி, பேரூராட்சிகள், மின்சார வாரியம்...
தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் சீறிப்பாயும் தண்ணீர்: பொதுமக்கள் குளிக்க தடை
ஊத்துக்கோட்டை, டிச.1: பெரியபாளையம் அருகே, தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பெரிய அளவிலான தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பனை மழை காலத்தில் தண்ணீர் நிரம்பினால் ஒரு பகுதி சோழவரம் ஏரிக்கும் மற்றொருபுறம் கடலுக்கும் செல்லும். இந்நிலையில், தாமரைப்பாக்கம், செம்பேடு, வெள்ளியூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால்,...
மதுரவாயல் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
பூந்தமல்லி, டிச.1: மதுரவாயல் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.சென்னையில் நேற்று முன்தினம் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் மதுரவாயல் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து உடனடியாக மதுரவாயல் போலீசாருக்கு...