பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
திருத்தணி, ஜூலை 26: போக்சோ வழக்கை வாபஸ் பெறக்கோரி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி அருகே, விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி லதா(30). இவர்களது மகள் திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி மகளை...
மீஞ்சூரில் ஆமை வேகத்தில் ரயில்வே மேம்பால பணிகள்: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
பொன்னேரி, ஜூலை 26: சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே, மீஞ்சூர்-காட்டூர் சாலையில் மத்திய, மாநில அரசு அனுமதி பெற்று சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.55 கோடியில் கடந்த 2016ம் ஆண்டு மீஞ்சூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில், மீஞ்சூர்-காட்டுர் சாலை அரியன்வாயல் பகுதியில் இருபுறங்களிலும் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினர்,...
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு பயறு வகைகள்
திருவள்ளூர், ஜூலை 25: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூண்டி ஒன்றியம், கைவண்டூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் பால்ராஜ், வட்டாட்சியர் (பொ) பரமசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுலோச்சனா, செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் இளையராஜா...
பள்ளிப்பட்டு அருகே சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
பள்ளிப்பட்டு, ஜூலை 25: பள்ளிப்பட்டு அருகே, பொம்மராஜூபேட்டையிலிருந்து மேலபூடி செல்லும் ஒன்றிய சாலையோரத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொக்லைன் மூலம் சுமார் 500 மீட்டர் தூரம் பள்ளம் எடுக்கப்பட்டது. அங்குள்ள நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் விட மேலபூடி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மழைநீர் வடிகால்வாய் பணிகள் நிறுத்தப்பட்டது....
திருவள்ளூர் மோவூர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு
திருவள்ளுர், ஜூலை 25: திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப், தரமான ஆவின் கால்நடை தீவனத்தை கறவை மாடுகளுக்கு வழங்கி, பால் கொள்முதல் செய்து, அதிக விலையினை பெற சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். இதன்மூலம் அனைத்து பால் உற்பத்தியாளர்களும் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி பயனடையுமாறும், கால்நடைகளுக்கு சத்தான தீவனம் வழங்குமாறும் அறிவுறுத்தினார். அந்த வகையில், TLR...
ஆர்.கே.பேட்டை பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி விறுவிறு
ஆர்.கே.பேட்டை, ஜூலை 24: ஆர்.கே.பேட்டை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் தீவிரம் அடைந்துள்ளது....
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.71 கோடி வசூல்: 649 கிராம் தங்கம், 14,000 கிராம் வெள்ளி குவிந்தது
திருத்தணி, ஜூலை 24: திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 23 நாட்களில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக ரூ.1.71 கோடி செலுத்தியுள்ளனர். திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாதத்தில் முதல் கிருத்திகையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட...
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை மீண்டும் உயர்வு
மாதவரம், ஜூலை 24: ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை மீண்டும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி...
திருத்தணி தொகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்: கலெக்டரிடம் எம்எல்ஏ மனு
திருவள்ளூர்: திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை நேற்று கலெக்டர் மு.பிரதாப்பிடம், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் நேரில் வழங்கினார். அந்த மனுவில், அரசுப் பள்ளிகளை சீரமைக்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும்...