மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு
ஊத்துக்கோட்டை, நவ.26: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், ஊர் எல்லையில் செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகில் 916 ஏக்கர் கொண்ட ஈசா ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகில் உள்ள மீன் குட்டையில் அப்பகுதியை சேர்ந்த தனி நபர்கள் சிலர் மீன் பிடித்த வலை சேதமாகி விட்டதால் அந்த வலையை ஏரிக்கரை ஓரமாக போட்டு விட்டனர்....
திருத்தணி முருகன் கோயிலில் மறைந்த வள்ளி யானைக்கு ரூ.49.50 லட்சத்தில் மணிமண்டபம்: விரைவில் திறப்பு விழா
திருத்தணி,நவ.25: திருத்தணி முருகன் கோயிலில் இறந்த வள்ளி என்று அழைக்கப்பட்ட யானைக்கு ரூ.49.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட யானை சிற்பத்துடன் கூடிய மணிமண்டபம் பணிகள் முடிந்த நிலையில், விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. திருத்தணி முருகனுக்கு தெய்வானையுடன் திருமணத்தின்போது சீதனமாக தேவேந்திரன் ஐராவதம்(யானை) வழங்கியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முருகன் வாகனம் மயில் என்று போற்றப்பட்டாலும்...
13 வயது சிறுமியை சீரழித்த தாயின் 2வது கணவனுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை: உடந்தையாக இருந்த தாய்க்கு 6 மாதம் சிறை
திருவள்ளூர், நவ.25: திருவள்ளூர் அருகே 13 வயது சிறுமியை சீரழித்த தாயின் 2 வது கணவனுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த தாய்க்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே தேவலாம்பாபுரம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் தரணி(54). அதே பகுதியைச் சேர்ந்தவர்...
செங்குன்றம் அருகே காதல் திருமணம் செய்த இளம் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை
புழல், நவ.25: செங்குன்றம் அருகே காதல் திருமணம் செய்த இளம் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டம், அகரகொந்தகை கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி(27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சி காந்திநகரை சேர்ந்த ராகுல்(30) என்பவரை காதலித்தார். இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த...
பூந்தமல்லி அருகே 5 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது
பூந்தமல்லி, நவ.22: பூந்தமல்லி அருகே 5 கிலோ கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பூந்தமல்லி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையில் எஸ்ஐ நாட்டாளம்மை மற்றும் போலீசார்...
சென்னையில் இருந்து குமரி சென்றபோது ரயிலில் பயணி தவறவிட்ட 18 சவரன், பணம் மீட்பு
போரூர், நவ.22: சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் கணேஷ் செந்தில்குமார் (36). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை சென்னையிலிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். நேற்று காலை ரயில் ஆரல்வாய்மொழி நிலையத்தில் ரயில் நின்றதும், இவர்கள் தாங்கள்...
செம்பரம்பாக்கம் அரசு பள்ளிகளில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு
திருவள்ளூர், நவ.22: செம்பரம்பாக்கம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு புகையிலை இல்லா இளைய சமுதாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பூந்தமல்லி பொது சுகாதாரம், நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட செம்பரம்பாக்கம், அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளிகளில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் 3.0 விழிப்புணர்வு பேரணி...
பெரியபாளையத்தில் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள பைக்குகள்: ஓட்டுநர்கள் கடும் அவதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என எதிர்பார்ப்பு
ஊத்துக்கோட்டை, நவ.21: பெரியபாளையம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைக்குகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாரகளா? என பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பெரியபாளையம் ஊராட்சியில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ-மாணவிகள் என 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும், இங்கு புகழ் பெற்ற பவானி அம்மன்...
பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: இன்று மாலை வரை நடைபெறுகிறது
பொன்னேரி, நவ.21: பொன்னேரி அடுத்த, பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் சாகர் கவாச் தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் கூட்டு பயிற்சியான சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது. இந்த பாதுகாப்பு ஒத்திைக நிகழ்ச்சி இன்று மாலை வரை நடைபெறுகிறது. சாகர் கவாச் என்பது இந்தியாவின் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் ஒரு கூட்டுப்...