சிறுமி பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் சென்னை நீதிபதி ஆய்வு: குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய அறிவுறுத்தல்
திருவள்ளூர், ஜூலை 20: திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் சிறுவன் கடத்தல், சிறுமி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர், திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும்...
அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம்
திருத்தணி, ஜூலை 20: திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 15வது மானிய குழு திட்டத்தின் கீழ் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகளை திருமுல்லைவாயல் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ முன்னிலையில் காணொலியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து...
ஆந்திராவிலிருந்து போதைப்பொருள் கடத்தியவர் கைது
திருத்தணி. ஜூலை 20: திருத்தணி அருகே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொன்பாடி சோதனைச் சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பதியிலிருந்து திருத்தணி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் சோதனையிட்டதில், திருவாலங்காடு அருகே தொழிதாவூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (41) என்பவர் 6.5 கிலோ புகையிலை பதுக்கி கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார்...
மின்கம்பி அறுந்து மின்சார ரயில் சேவை பாதிப்பு
மாதவரம், ஜூலை 19: அரக்கோணத்திலிருந்து சென்னை பீச் வரை செல்லும் மின்சார ரயில் நேற்று இரவு 7.30 மணியளவில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தை கடந்து பழைய வண்ணாரப்பேட்டை வழியாக செல்லும்போது மின் கம்பி அறந்து விழுந்தது. இதனால், மின்சார ரயில் நின்றது. அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி...
செங்குன்றத்தில் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.40 லட்சம் மோசடி: ஊழியர் கைது
புழல், ஜூலை 19: செங்குன்றத்தில் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஊழியரை, போலீசார் கைது செய்தனர். செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே ஜி.என்.டி சாலையில் சொந்தமாக சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். இவரது, கடையில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் சென்னை கே.கே...
திருத்தணியில் 74 மி.மீ மழை அரசு பள்ளியில் குளம் போல் தேங்கிய மழைநீரால் மாணவர்கள் அவதி
திருத்தணி, ஜூலை 19: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 74 மி.மீ மழை பதிவானதாக வானிலை...
உயர்கல்வி சேர்க்கைக்கு நாளை குறைதீர் கூட்டம்
திருவள்ளூர், ஜூலை 18: திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து மாணவ - மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், உயர்கல்வி ஆலோசனை மைய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது....
திருத்தணியில் நிரந்தரமாக கிராம அலுவலரை நியமிக்க கோரிக்கை
திருத்தணி, ஜூலை 18: வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பெற கிராம நிர்வாக அலுவலரை அணுக வேண்டியுள்ளது. இருப்பினும், திருத்தணி நகரில் கடந்த ஒன்றரை ஆண்டாக நிரந்தர கிராம நிர்வாக அலுவலர் இல்லாத நிலையில் சிவ்வாடா கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் திருத்தணி நகரில் கூடுதல்...
பள்ளிப்பட்டு அரசுப்பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
பள்ளிப்பட்டு, ஜூலை 18: பள்ளிப்பட்டு அருகே, அத்திமாஞ்சேரிபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தேவசகாயம் தலைமை வகித்தார். இதில் பள்ளிப்பட்டு வட்டார குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கிரிஜா பங்கேற்று போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து...