மாணவியை கர்ப்பமாக்கிய மாமன் போக்சோவில் கைது
திருத்தணி: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய அக்காள் கணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பள்ளி மாணவியை அவரது குடும்பத்தினர் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சையின் போது சிறுமியின் ஆதார் கார்டை மருத்துவர்கள் சோதித்ததில் சிறுமிக்கு 17 வயது என குறிப்பிட்டிருந்தது....
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை கூட்டம்
புழல்: செங்குன்றம் அடுத்த புள்ளி லைன் தனியார் பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது மாவட்ட மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் என்.எஸ்.பிரதாப் சந்திரன் தலைமை தாங்கினார்.மாவட்ட துணை செயலாளர் வி.சரவணன் சிறப்புரையாற்றினார் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பி.வி.செந்தில் மாவட்ட நிர்வாகிகள் ஜி.பாலன் என்.ஜீவா...
கும்மிடிப்பூண்டியில் வீடு வீடாக சென்று திமுக உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தெற்கு கிழக்கு மேற்கு பேரூர் ஒன்றிய திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற இலக்கினை முன்வைத்து புதுவாயிலில் திமுக உறுப்பினர் சேர்க்கை நேற்று நடந்தது. கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் திருமலை ஒன்றிய...
திருமுல்லைவாயல் நற்கருணை நாதர் ஆலய ஆண்டு விழா இன்று தேர் பவனி
ஆவடி: திருமுல்லைவாயல் தென்றல் நகர் நற்கருணைநாதர் ஆலயத்தின் 20ம் ஆண்டு பெருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் ஜெபமாலை மற்றும் திருப்பலி நடந்தன. இதை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் ‘நற்கருணை எதிர்நோக்கின் வெளிப்பாடு’ என்ற சிந்தனையில் சிறப்பு ஜெபமாலை திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்...
ஊத்துக்கோட்டை அருகே வீட்டுமனை பட்டா கேட்டு கிராமமக்கள் திடீர் போராட்டம்
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே வீட்டுமனை பட்டா கேட்டு கிராமமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை அருகே லச்சிவாக்கம் ஊராட்சி பத்தி நாயுடு கண்டிகை கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஒரு வீட்டில் 2 முதல் 3 குடும்பம் வரை வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க...
ஊத்துக்கோட்டையில் மறைந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினரான பூண்டி ஒன்றியம் திம்ம பூபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன் கடந்த ஓராண்டுக்கு முன்பு மறைந்ததையொட்டி அவரது குடும்பத்தாருக்கு இந்திய பார்கவுன்சில் மூலம் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் வெற்றி தமிழன்...
ரயில் மோதி தொழிலாளி பலி
திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் கடந்த தொழிலாளி ரயில் மோதி பரிதாபமாக பலியானார்.திருவள்ளூர் ஆசூரி தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் அங்குள்ள இனிப்பகத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நாகராஜ் தனது மனைவி சுப்ரஜா மகன் மோகன் ஆகியோருடன் சென்னைக்கு செல்ல திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். சென்னை செல்லும் மின்சார ரயில் 3வது நடைமேடையில்...
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினர் சேர்க்கும் பணி தீவிரம்
திருவள்ளூர்: திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்க `ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற தலைப்பில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பை தொடங்கி வைத்தார். அதன்படி கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் கிராமத்தில் `ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற தலைப்பில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது....
திருவள்ளூர் அடுத்த வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் திருப்பதி அரக்கோணம் பொன்னேரி கும்மிடிப்பூண்டி ஊத்துக்கோட்டை திருத்தணி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நாள் தோறும் 80 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் சென்னை மாநகரப்...