மழைவிடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்: கலெக்டர் பிரதாப் அறிவிப்பு
திருவள்ளூர், அக்.31: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 22ம்தேதி கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை, ஈடு செய்யும் வகையில் (நவ.1ம்தேதி சனிக்கிழமை) நாளை அரசு, அரசு...
ஒருங்கிணைந்த போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
திருவள்ளூர், அக்.31: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு, திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடந்து வருகிறது. கட்டணமில்லாத இப்பயிற்சி வரும் நவ.5ம் தேதி காலை...
பூண்டி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் 1000 கன அடியாக குறைப்பு: அதிகாரி தகவல்
திருவள்ளூர், அக்.31: திருவள்ளூர் மாவட்டத்தில மழை குறைந்ததால், பூண்டி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் 2000 கன அடியில் இருந்து மீண்டும் 1000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில், பருவமழை தொடங்கி, தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நீர்...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் ஆலோசனை கூட்டம்: கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது
திருவள்ளூர், அக்.30: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரதாப் தலைமை தாங்கினார். இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு...
மழையின்றி நீர்வரத்து குறைந்ததால் புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்
புழல், அக்.30: மழையின்றி நீர்வரத்து குறைந்ததால், புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட 500 கன அடி உபரிநீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மோன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் இருந்து நேற்று முன்தினம் மீண்டும் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. 1000 கன அடியாக உயர்த்தப்பட்டு, பின்னர் 500 கன அடியாக...
நவ.2ம் தேதி ராக்கெட் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
பொன்னேரி, அக்.30: ஹரிகோட்டாவில் நவ.2ம் தேதி ராக்கெட் ஏவப்பட உள்ளதால், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் நவம்பர் 2ம் தேதி மாலை 5.26 மணிக்கு எல்விஎம்3-எம்5 ராக்கெட் மூலம் தொலைதொடர்புக்கான சிஎம்எஸ்3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட் ஏவும் காலங்களில்...
கந்த சஷ்டி விழா நிறைவு நாளான நேற்று திருத்தணி முருகன் கோயிலில் உற்சவருக்கு திருக்கல்யாணம்: கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்
திருத்தணி, அக்.29:திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி சண்முகருக்கு லட்சார்ச்சனையுடன் தொடங்கி 7 நாட்கள் நடைபெற்றது. விழாவில், தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் அலங்காரம் மகாதீபாராதனை நடைபெற்றன. காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வில்வ இலைகளால்...
நீர்வரத்து அதிகரித்து வரும்நிலையில் புழல் ஏரியில் 1,000 கன அடி உபரிநீர் திறப்பு
புழல், அக்.29: சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே வேகமாக நிரம்பியது. ஏற்கனவே, கடந்த 15ம்தேதி முதல் புழல் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பது...
திருநின்றவூர் நத்தமேடு ஏரி நிரம்பியதால் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்
ஆவடி, அக்.29: வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக திருநின்றவூரில் உள்ள நத்தமேடு...